காங்கிரஸ் - திமுக உடன்பாடு: கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை

கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்

கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்

Updated on
1 min read

காங்​கிரஸ் -இடையே தொகுதி உடன்​பாடு ஏற்​படும் என காங்​கிரஸ் எம்​.பி. கார்த்தி சிதம்​பரம் தெரி​வித்​தார். தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமி​ழ​கத்​தில் மிகப்​பெரிய கட்​சி​யான அதி​முக​வுக்கு அதி​கள​வில் உறுப்​பினர்​கள் உள்​ளனர்.

ஆனால், அக்​கட்​சி​யின் செயல்​பாடு முன்​பிருந்​தது​போல தற்​போது இல்​லை. அக்​கட்​சி​யில் எந்த முடிவை​யும் எடுக்க முடி​யாமல் உள்​ளனர். கட்சி பஞ்​சா​யத்​துக்​கு​கூட பாஜகவை நாட வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ளது.

தவெக தலை​வர் விஜய் நடத்​தும் கட்சி இன்​னும் அரசி​யல் கட்​சி​யாக மாற​வில்​லை. அது தற்​போதும் ரசிகர் மன்​ற​மாக தான் உள்​ளது. விஜய்க்​கென்று ஒரு ரசிகர் கூட்​டம் உள்​ளது. அது ஆதரவு கூட்​ட​மாக மாறலாம். ஆனால். அந்​தக் கூட்​டம் வாக்கு வங்​கி​யாக மாறலாம். அந்த வாக்​கு​கள் சீட்​டாக மாறுமா என்​பது கேள்விக்​குறி​தான்.

காங்​கிரஸ்- திமுக கூட்​டணி தொடர வேண்​டும் என்ற எண்​ணத்​துடன் 2 கட்​சிகளும் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது.​காங்​கிரஸ் அதி​காரப்​பூர்​வ​மான பேச்​சு​வார்த்​தையை திமுக​வுடன்​தான் நடத்​துகிறது. இதில் உடன்​பாடு ஏற்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்</p></div>
விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: அமித் ஷாவை சந்தித்த பின் இபிஎஸ் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in