அரும்பாக்கம் பள்ளிவாசல் சம்பவம்: இந்து அமைப்புகள் மீது அவதூறு பரப்பி மத மோதலைத் தூண்ட முயற்சி - டிஜிபி அலுவலகத்தில் புகார்

அரும்பாக்கம் பள்ளிவாசல் சம்பவம்: இந்து அமைப்புகள் மீது அவதூறு பரப்பி மத மோதலைத் தூண்ட முயற்சி - டிஜிபி அலுவலகத்தில் புகார்
Updated on: 
1 min read

சென்னை: அரும்​பாக்​கம் பள்ளிவாசல் சம்​பவத்​தில் இந்து அமைப்​பு​கள் மீது அவதூறு பரப்பி மத மோதலைத் தூண்ட முயற்சி நடப்​ப​தாக டிஜிபி அலு​வல​கத்​தில் இந்து முன்​னணி புகார் அளித்​துள்​ளது.

இது​குறித்து இந்து முன்​னணி மாநில செய்​தித் தொடர்​பாளர் இளங்​கோவன் சென்னை டிஜிபி அலு​வல​கத்​தில் அளித்​துள்ள புகார் மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2 நாட்​களுக்கு முன்பு அரும்​பாக்​கத்​தில் உள்ள பள்​ளிவாசலில் மனநலம் பாதிக்​கப்​பட்ட நபரால் நிகழ்ந்த அசம்​பாவிதச் சம்​பவம் நடந்​தது.

இச்​சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​தாகக் கூறப்​படும் சித்​தார்த் என்​பவர், கடந்த பல ஆண்​டுகளாகத் தீவிர மனநல சிகிச்சை பெற்று வரும் மாற்​றுத்​திறனாளி. அவர் தீவிர மனநலப் பாதிப்​பால் பள்​ளிவாசல் சென்​றதாகக் கூறப்​படும் நிலை​யில், அங்​கிருந்த சிலர் அவரை மிகக் கொடூர​மாகத் தாக்​கி​யுள்​ளனர்.

மேலும், மனநலம் பாதிக்​கப்​பட்ட ஒரு​வரை இப்​படித் தாக்​கலாமா எனக் கேட்டு, அவரை மீட்​கச் சென்ற அவரது குடும்ப உறவினரை​யும் விடா​மல் தாக்​கி​யுள்​ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்​து​வ​மனை​யில் உள்​நோயாளியாக அனுமதிக்​கப்​பட்டு, தீவிர சிகிச்​சைப் பிரி​வில் உள்​ளார்.

இந்​தச் சம்​பவத்தை, திட்​ட​மிட்டு ஆர்.எஸ்.எஸ். மற்​றும் இந்து அமைப்​பு​கள் மீது திசைதிருப்பி, பொய்​யான தகவல்​களைப் பரப்பி மத மோதலை உரு​வாக்​கச் சிலர் முயற்​சிக்​கின்​றனர்.

ஏற்​கெனவே மற்​றொரு பள்​ளிவாசலில் தக​ராறில் ஈடு​பட்ட நபர், தன்னை ஒரு குறிப்​பிட்ட அரசி​யல் கட்​சி​யின் உறுப்​பினர் எனக் கூறியபோதும், அந்​தச் சம்​பவத்தை இந்து அமைப்​பு​கள் மீது திசைதிருப்ப முயற்சி நடை​பெற்​றது.

தற்​போதைய சம்​பவத்​திலும் அதே பாணி​யில் அவதூறு பரப்பி, வன்​முறையைத் தூண்​டும் நோக்​கில் சிலர் செயல்​படு​கின்​றனர். எனவே, மனநலம் பாதிக்​கப்​பட்ட மாற்​றுத்​திறனாளி மற்​றும் அவரது உறவினர் மீது தாக்​குதல் நடத்​திய நபர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்து அவர்​களைக் கைது செய்ய வேண்​டும்.

மேலும், இந்​தச் சம்​பவத்​தைப் பயன்​படுத்தி வன்​முறையைத் தூண்​ட​வும், இந்து அமைப்​பு​கள் மீது திட்​ட​மிட்டு அவதூறு பரப்பி சமூக அமைதி​யைக் குலைக்​கவும் முயற்​சிப்​போரின் பின்​னணி குறித்து விசா​ரணை நடத்தி உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அரும்பாக்கம் பள்ளிவாசல் சம்பவம்: இந்து அமைப்புகள் மீது அவதூறு பரப்பி மத மோதலைத் தூண்ட முயற்சி - டிஜிபி அலுவலகத்தில் புகார்
போக்குவரத்து போலீஸாருக்கு புதிதாக 50 பைக்குகள், கார்: ஹோண்டா இந்தியா பவுண்டேஷன் வழங்கியது

X