சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்: கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு 19 பேரை புதிய நீதிப​தி​களாக நியமிக்க உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் மத்​திய அரசுக்கு பரிந்​துரை செய்​துள்​ளது.

சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளைக்கு அனு​ம​திக்​கப்​பட்ட மொத்​தம் உள்ள 75 நீதிப​தி​கள் பணி​யிடங்​களில் தற்​போது 23 நீதிபதி பணி​யிடங்​கள் நீண்​ட​ கால​மாக நிரப்​பப்​ப​டா​மல் காலி​யாக உள்​ளன.

இந்த காலிப்​ பணி​யிடங்​களை நிரப்​பும் வகையில் கடந்​தாண்டு மாவட்ட நீதிப​திகள் அந்​தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் எஸ்​.அல்லி மற்​றும் மாவட்ட நீதிப​தி​களான பி.​முரு​கன், எம்​.டி.சும​தி, சி.​திரு​மகள் சந்​திரசேகர், டி.லிங்​கேஸ்​வரன், கே.​பால தண்​டா​யுதம், எஸ்​.​கார்த்​தி​கேயன், பி.​முரு​கேசன், என்.குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்​கள் பரிந்​துரைக்​கப்​பட்​டிருந்​தன.

இதே​போல சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அமலாக்​கத் துறை சிறப்பு வழக்​கறிஞர்​களாக பணி​யாற்​றிய என்​.ரமேஷ், ரஜினிஷ் பதி​யில், வழக்​கறிஞர் ஜி.கே.​முத்​துக்​குமார், மத்​திய அரசின் துணை சொலிசிட்​டர் ஜெனரலாக பதவி வகித்த ஆர்​.​ராஜேஷ் விவேகானந்​தன், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் உதவி சொலிசிட்​டர் ஜெனரலாக பதவி வகித்த கே.கோ​விந்த ராஜன், புதுச்​சேரி மாநில அரசு வழக்​கறிஞ​ராக பதவி வகித்த எஸ்​.ரவிக்​கு​மார், ஏற்​கெனவே சிறப்பு அரசு வழக்​கறிஞ​ராக பதவி வகித்த ஆர்​.அனிதா மற்​றும் வழக்​கறிஞர்​கள் இ.மனோகரன், என்​.​திலீப்​கு​மார், கே.அப்பா துரை ஆகிய 10 பேரின் பெயர்களும் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் பணி​யிடத்​துக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி தலை​மையி​லான கொலீஜி​யத்​தின் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு புதிய நீதிப​தி​களாக, சென்னை உயர் நீதி​மன்ற கொலீஜி​யத்​தால் பரிந்​துரைக்​கப்​பட்ட 19 பேருக்​கும் ஒப்​புதல் அளித்த உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம், இந்​தப் பட்​டியலை மத்​திய அரசுக்கு பரிந்​துரைத்​துள்​ளது. அடுத்​தக் கட்​ட​மாக, இவர்​களின் நியமனத்​துக்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளிக்​கும்​பட்​சத்​தில், குடியரசுத்​ தலை​வர்​ இவர்​களை சென்​னை உயர்​ நீதி​மன்​றத்​தின்​ புதிய நீதிப​தி​களாக நியமித்​து உத்​தரவு பிறப்​பிப்​​பார்​.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதிமன்றம்</p></div>
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் திருப்பம்: அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in