துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி தலைவர் பிரதிநிதியை சேர்த்தால் ஆளுநர் பிரதிநிதியை நீக்க கல்லூரி ஆசிரியர் கழகம் ஆலோசனை

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி தலைவர் பிரதிநிதியை சேர்த்தால் ஆளுநர் பிரதிநிதியை நீக்க கல்லூரி ஆசிரியர் கழகம் ஆலோசனை
Updated on: 
1 min read

சென்னை: துணைவேந்தர் தேடுதல் குழு​வில் யுஜிசி தலை​வரின் பிர​தி​நி​தியை சேர்ப்பதால், ஆளுநரின் பிர​தி​நி​தியை நீக்​கி​ விடலாம் என்று தமிழ்​நாடு அரசுக் கல்​லூரி ஆசிரியர் கழகம் கூறி​யுள்​ளது.

இதுகுறித்து அதன் பொதுச் செய​லா​ளர் சோ.சுரேஷ் வெளி​யிட்ட அறிக்கை: பல்​கலைக்​கழக துணைவேந்​தர் தேடு​தல் குழு​வில் ஆளுநர், யுஜிசி தலை​வர், தமிழக அரசு, பல்​கலைக்​கழக சிண்​டிகேட் ஆகிய 4 தரப்​பின் பிர​தி​நி​தி​கள் தலா ஒரு​வர் இடம்​பெற வேண்​டும் என ஆளுநர் முன்​மொழிந்​துள்​ளார்.

இதில் ஆளுநரின் பிர​தி​நி​தி, யுஜிசி தலை​வரின் பிர​தி​நிதி என மத்​திய அரசு பிர​தி​நி​தி​கள் இரு​வரும், மாநில அரசின் பிர​தி​நிதி ஒரு​வரும் உள்​ளனர். தேடு​தல் குழு​வில் மத்​திய, மாநில அரசுகளின் பிர​தி​நி​தி​கள் சம அளவில் இருப்​பது​தான் கூட்​டாட்சி தத்​து​வத்தை மதிப்​ப​தாகும்.

எனவே, யுஜிசி விதி​முறை​களைப் பின்​பற்​று​வதற்​கான ஏற்​பா​டாக அதன் தலை​வர் பிர​தி​நி​தியை அனைத்து பல்​கலைக்​கழகங்​களின் துணைவேந்​தர் தேடு​தல் குழு​வில் புதி​தாக சேர்க்​கலாம்.

அதே​போல, ஆளுநரின் பிர​தி​நிதி இருக்க வேண்​டும் என யுஜிசி விதி​முறை​கள் கூற​வில்​லை. எனவே, அவரின் பிர​தி​நி​தியை நீக்​கி​விடலாம். கூடு​தலாக, 4 பல்​கலைக்​கழக தேடு​தல் குழு​வில் தமிழக அரசு பிர​தி​நி​தியை இடம்​பெறச் செய்​ய​லாம்.

இதன் மூலம் மத்​திய, மாநில அரசுகளின் பிர​தி​நி​தி​கள் சமஅள​வில் இருப்பார்​கள். யுஜிசி வி​தி​முறை​யை ஏற்​ப​தாகவும் இருக்​கும்.

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி தலைவர் பிரதிநிதியை சேர்த்தால் ஆளுநர் பிரதிநிதியை நீக்க கல்லூரி ஆசிரியர் கழகம் ஆலோசனை
பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு: 21 இளம் வழக்கறிஞர்களின் பதிவு ரத்து

X