பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு: 21 இளம் வழக்கறிஞர்களின் பதிவு ரத்து

பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு: 21 இளம் வழக்கறிஞர்களின் பதிவு ரத்து
Updated on: 
1 min read

சென்னை: பார் கவுன்​சி​லில் இளம் வழக்​கறிஞராகப் பதிவு செய்த பிறகு உயர் நீதி​மன்​றத்​துக்கு வெளியே பட்​டாசு வெடித்​தும், வாளால் கேக் வெட்​டி யும் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​படுத்​திய 21 பேரின் பதிவை தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் ரத்து செய்துள்​ளது,

கடந்த நவ.11 அன்று தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சி​லி்ல் 4,500-க்​கும் மேற்​பட்ட சட்​டப் பட்​ட​தா​ரி​கள் இளம் வழக்​கறிஞர்​களாகப் பதிவு செய்​யும் நிகழ்வு சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள கலை​யரங்​கில் நடந்​தது.

இந்​நிகழ்​வில் உச்ச நீதி​மன்ற நீதிபதி மோக​னா​வும் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். இந்​நிலை​யில் பார் கவுன்​சில் பதிவு நிகழ்வு முடிந்​ததும் வழக்​கறிஞர்​களை உற்​சாகப்​படுத்​தும் வகை​யில் அவரது உறவினர்​களும், நண்​பர்​களும் உயர் நீதி​மன்ற வளாகத்​தைச் சுற்​றி​லும் உள்ள சாலைகளில் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வித​மாக பட்​டாசு மற்​றும் சரவெடிகளை வெடித்​தும், வாளால் கேக் வெட்​டியும், ஆளுயர மாலைகளை அணி​வித்​தும், பேனர்​கள் வைத்​தும், கோஷங்​கள் எழுப்​பியும் தங்​களது மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர்.

இத​னால் என்​எஸ்சி போஸ் சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெருக்​கடி ஏற்​பட்டு வாக​னங்​கள் நீண்ட வரிசையில் காத்​துக் கிடந்​தன.

இதுபோல ஒவ்​வொரு முறை பார் கவுன்​சி​லில் வழக்​கறிஞர்​கள் பதிவு நிகழ்ச்சி நடை​பெறும் போதும் உயர் நீதி்மன்ற வளாகம் முழு​வதும் குப்பை, கூளமாக மாறு​வதும், இரவு நேரங்​களில் துப்​புரவு பணி​யாளர்​கள் அதை அகற்​று​வதும், உயர் நீதி​மன்​றத்​தின் அனைத்து வாயில்​களி​லும் போலீ​ஸாருடன், இளம் வழக்​கறிஞர்​களு​டன் வருபவர்​களை நீதி​மன்​றத்​துக்​குள் அனுமதிக்க மறுப்​ப​தால் வாக்​கு​வாதத்​தில் ஈடு​படுவதும் வாடிக்​கை​யாக இருந்து வந்​தது.

இந்​நிலை​யில் கடந்த நவ.11 அன்று வழக்​கறிஞர் பதிவு நிகழ்​வின் போது போக்​கு​வரத்​துக்கு இடையூறாக செயல்​பட்ட 21 இளம் வழக்​கறிஞர்​களின் பதிவை தற்​காலிக​மாக ரத்து செய்து தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் செஞ்சி கே.கதிரவன், துணைத் தலை​வர் இ.பாலமுருகன், அகில இந்​திய பார் கவுன்​சில் உறுப்​பினர் பி.எஸ்.அமல்​ராஜ் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் நட​வடிக்கை எடுத்​துள்​ளனர்.

இது ​தொடர்​பாக அவர்​கள் கூறுகை​யில், “வழக்​கறிஞர்​களாக இந்த சமூகத்​துக்கு தங்​களை அடை​யாளப்​படுத்​திக் கொள்​பவர்​கள்பொறுப்​புணர்​வுடன் நடந்து கொள்ள வேண்​டும். இனி வழக்​கறிஞர் பதிவு நிகழ்​வுக்கு 300 பேருக்கு மேல் யாரை​யும் அனுமதிப்​ப​தில்லை என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அல்​லிக்​குளம் நீதி​மன்ற வளாகத்​தில் வழக்​கறிஞர்​களு​டன் மோதலில் ஈடு​பட்ட வழக்​கறிஞர் பிரசன்ன வெங்​கடேஷ் என்​பவர் தற்காலிக இடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும் 4 வழக்​கறிஞர்​களுக்கு நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

டாக்​டர் சுப்​பையா கொலை வழக்​கில் தண்​டனை விதிக்​கப்​பட்ட வழக்​கறிஞர்​கள் பி.எம்.பாசில், பி.வில்​லியம்ஸ் ஆகியோரது வழக்​கறிஞர் பதிவு நிரந்​தர​மாக நீக்​கப்​பட்​டுள்​ளது” என்​றனர்.

பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு: 21 இளம் வழக்கறிஞர்களின் பதிவு ரத்து
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிக்கான தடை நீட்டிப்பு: அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி

X