“முந்தைய திமுக அரசின் ஊழலால் சிஎம்டிஏவில் ஊதியம் வழங்க பணம் இல்லை” - அன்புமணி குற்றச்சாட்டு

பாமக தலைவர் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி

Updated on
1 min read

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்கை​: சென்னை மற்​றும் 4 புறநகர் மாவட்​டங்​களில் கட்டுமானப் பணி​கள், நிலப் பயன்​பாடு ஆகிய​வற்றை தீர்மானிக்கும் அதி​காரம் கொண்ட சென்னை பெருநகர வளர்ச்சிக்​ குழு​மம் (சிஎம்​டிஏ) அடுத்த மாதத்​துக்​கான ஊதி​யம் வழங்​கக்​கூட பணமின்றி திவாலானதாக வெளி​யான தகவல் அதிர்ச்​சி​ அளிக்​கிறது.

54 ஆண்​டு​ கால வரலாற்​றில் இல்​லாத வகை​யில் அடிப்​படை செலவு​களுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்​தும் நிலைக்கு சிஎம்​டிஏ தள்​ளப்​பட்​டது ஏன் ? முந்​தைய திமுக ஆட்​சி​யின் கடைசி ஓராண்​டில் ஊழலும்,கொள்​ளை​யும் உச்​சத்தை அடைந்​திருந்​தன.

சிஎம்​டிஏவை நிர்​வகித்​தவர்​கள் தங்​கள் பங்​குக்கு ஊழல் செய்வதற்​காக ஒழுங்​கு​முறை அமைப்​பான சிஎம்​டிஏவை கட்டமைப்பு பணி​களை மேற்​கொள்ள செய்​து, அதற்​கான ஒப்பந்தங்​களின் மூலம் ஊழல் செய்​தார்​கள் என்ற குற்​றச்​சாட்டு உள்​ளது. இதனால் தான் சிஎம்​டிஏவை ஊதி​யம் வழங்​கு​வதற்கு கூட நிதி இல்​லாத நிலைக்கு தள்​ளி​யுள்​ளது.

எனவே, சிஎம்​டிஏ அமைப்​பின் மூலம் மேற்​கொள்​ளப்​பட்ட பணிகளுக்​கான ஒப்​பந்​தங்​கள் யார், யாருக்கு வழங்​கப்​பட்​டன. அவற்​றில் ஊழல்​கள், முறை​கேடு​கள் நடந்​தனவா என்பன உள்ளிட்ட விவரங்​கள் அடங்​கிய வெள்ளை அறிக்​கையை அரசு வெளி​யிட வேண்​டும். அதே​போல், சிஎம்​டிஏ பணி​கள் பாதிக்கப்படா​மல் இருப்​ப​தற்​குத் தேவை​யான நிதியை தமிழக அரசு வழங்க வேண்​டும் என அறிக்கையில் அவர்​ தெரிவித்துள்ளார்​.

<div class="paragraphs"><p><em>பாமக தலைவர் அன்புமணி</em></p></div>
முறைகேடாக மனை ஒதுக்கீடு பெற்றதாக குற்றச்சாட்டு: கருணாநிதியின் முன்னாள் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in