முறைகேடாக மனை ஒதுக்கீடு பெற்றதாக குற்றச்சாட்டு: கருணாநிதியின் முன்னாள் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து

முறைகேடாக மனை ஒதுக்கீடு பெற்றதாக குற்றச்சாட்டு: கருணாநிதியின் முன்னாள் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து
Updated on
1 min read

சென்னை: வீட்​டு​வசதி வாரிய வீட்டு மனையை முறை​கே​டாக பெற்​ற​தாக முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பாது​காவல​ராக இருந்த போலீஸ் அதி​காரி கணேசன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான வழக்கை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்​சி​யில் 2008ம் ஆண்டு வீட்​டு​வசதி வாரிய அமைச்ச​ராக பதவி வகித்த ஐ.பெரிய​சாமி, தனது அதி​காரத்தை தவறாகப் பயன்​படுத்தி 4,370 சதுரஅடி கொண்ட வீட்டு வசதி வாரிய வீட்டு மனையை, முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் தனிப் பாது​காவல​ராக பணி​யாற்​றிய போலீஸ் அதி​காரி கணேசனுக்கு முறை​கே​டாக ஒதுக்​கீடு செய்​துள்​ள​தாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்​குப்​ப​திவு செய்தனர்.

இந்த வழக்​கில் கணேசன், அவரது மனைவி பத்மா மற்​றும் முன்னாள் அமைச்​சர் ஐ.பெரிய​சாமி ஆகியோ​ருக்கு எதி​ராக வழக்குப் ​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு சென்னை எம்​.பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதிமன்றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இந்த வழக்​கில் இருந்து முன்னாள் அமைச்​ச​ரான ஐ.பெரிய​சாமியை விடு​வித்து சிறப்பு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதைத்​தொடர்ந்​து, ஐ.பெரிய​சாமி விடுவிக்​கப்​பட்​டதை மறுஆய்வு செய்​யும் வகை​யில் உயர் நீதி​மன்ற நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் தாமாக முன்​வந்து வழக்கை விசா​ரணைக்கு எடுத்து விசா​ரித்து வந்​தார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த நடவடிக்​கைக்கு எதி​ராக ஐ.பெரிய​சாமி உச்சநீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​து, உயர் நீதி​மன்ற விசா​ரணைக்கு தடை​ உத்​தரவு பெற்​றுள்​ளார்.

இந்​நிலை​யில் தனக்​கும் தனது மனை​விக்​கும் எதி​ராக சிறப்பு நீதிமன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை ரத்து செய்​யக்கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கணேசன் மனு தாக்​கல் செய்திருந்​தார். அரசு தரப்​பில் வழக்​கறிஞர் ஆர்​.கணேஷ் குமாரும், போலீஸ் அதி​காரி கணேசன் தரப்​பில் வழக்​கறிஞர் கே.முத்​து கணேச ​பாண்​டியனும் ஆஜராகி வாதிட்​டனர்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, விதி​களுக்கு உட்​பட்டே அனைத்து பரி​மாற்​றங்​களும் நடந்​துள்​ளது எனக்​ கூறி, குற்றம்சாட்டப்​பட்ட கணேசன் மற்​றும் அவரது மனை​விக்கு எதிராக சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்​து​ வரும்​ வழக்கை ரத்​து செய்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

முறைகேடாக மனை ஒதுக்கீடு பெற்றதாக குற்றச்சாட்டு: கருணாநிதியின் முன்னாள் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து
சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய 7 பேர் சஸ்பெண்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in