வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் ஆக.4 டெல்லி பயணம்

வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் ஆக.4 டெல்லி பயணம்
Updated on
1 min read

சென்னை: ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வின் புத்தக வெளி​யீட்டு விழா​வில் பங்​கேற்க முதல்​வர் விஜய் ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லி செல்ல உள்​ளார். இந்த விழா​வில் ராகுல் காந்தி உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

மதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், மூத்த நாடாளு​மன்ற உறுப்​பினரு​மான வைகோ​வின் அரசி​யல் மற்​றும் வரலாற்று பயணங்​கள் குறித்து அவரே ஆங்​கிலத்​தில் எழு​திய ‘வைகோ இன் பார்​லிமென்ட்’ என்ற நூல் வெளி​யீட்டு விழாவை, ஆக.4-ம் தேதி டெல்​லி​யில் நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இந்த விழா​வில் பங்​கேற்க முதல்​வர் விஜய்க்கு வைகோ அழைப்பு விடுத்​திருந்​தார். அதை ஏற்​றுக்​கொண்ட முதல்​வர் விஜய், அடுத்த மாதம் 4-ம் தேதி டெல்லி செல்ல உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

வைகோ​வின் நூலை நாடாளு​மன்ற எதிர்க்​கட்​சித் தலை​வரும் காங்​கிரஸ் கட்​சி​யின் முக்​கிய தலை​வரு​மான ராகுல் காந்தி வெளி​யிட முதல்​வர் விஜய் பெற்​றுக்​கொள்​வார் என கூறப்​படு​கிறது. டெல்லி பயணத்​தின்​போது மத்​திய அமைச்​சர்​கள் சிலரை​யும் முதல்​வர் விஜய் சந்​தித்து தமிழகத்​தின் முக்​கிய திட்​டங்​கள் குறித்து பேச வாய்ப்​புள்​ள​தாக​ கூறப்படுகிறது.

வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் ஆக.4 டெல்லி பயணம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in