இடைத்தேர்தலுக்கு அச்சாரமாகும் முதல்வர் விஜய்யின் பயணம்: நாளை புதுக்கோட்டையில் ‘ரோடு ஷோ’

இடைத்தேர்தலுக்கு அச்சாரமாகும் முதல்வர் விஜய்யின் பயணம்: நாளை புதுக்கோட்டையில் ‘ரோடு ஷோ’
Updated on: 
1 min read

சென்னை: இம்​மாதத்​தில் 3 மாவட்​டங்​களில் அரசு நிகழ்ச்​சிகளில் கலந்து கொண்டு நலத்​திட்ட உதவி​களை வழங்​கவுள்ள முதல்​வரின் அரசு முறைப் பயணம் இடைத்​தேர்​தலுக்கு அச்​சா​ர​மாக அமைந்​துள்​ள​தாக பேச்சு எழுந்​துள்​ளது.

தமிழகத்​தில் தவெக அரசு அமைந்​ததைத் தொடர்ந்து அண்​மையில் நடந்து முடிந்த தாராபுரம் மற்​றும் மதுராந்​தகம் ஆகிய தொகுதி​களுக்​கான இடைத்​தேர்​தல் வெற்​றியை பதிவு செய்​தது. இதைத் தொடர்ந்து, விராலிமலை, பெருந்​துறை, அம்​பாசமுத்​திரம், திருச்சி கிழக்கு மற்​றும் கரூர் ஆகிய 5 தொகுதி​களில் எப்​போது வேண்​டு​மானாலும் இடைத்​தேர்​தல் அறி​விக்​கப்​படும் சூழலில், தவெக​வின் பலத்தை பெரும்​பான்மை எண்​ணிக்​கைக்கு மிக அரு​கில் கொண்டு செல்ல முதல்​வர் விஜய் பல்​வேறு வியூகங்​களை வகுத்து வரு​கிறார்.

இந்த அரசி​யல் பின்​னணி​யில்​தான், அரசு நலத்​திட்​டங்​கள் மற்​றும் திறப்பு விழாக்​கள் மூலமாக மக்​களை நேரடி​யாகச் சென்​றடைய அவர் புதுக்​கோட்டை, ஈரோடு மற்​றும் அம்​பாசமுத்​திரம் செல்ல திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளியாகி உள்​ளன.

நாளை சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் புதுக்​கோட்டை செல்​லும் முதல்​வர் விஜய் அங்கு புதிய பேருந்து நிலை​யம், உள்​விளை​யாட்டு அரங்​கத்தை திறந்து வைப்​ப​துடன், ரூ.100 கோடி மதிப்​பில் 14 ஆயிரம் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்க உள்​ளார். இந்​நிகழ்ச்​சிகளை முடித்து 1.5 கி.மீ. தொலை​வுக்கு ரோடுஷோவாக சென்று பொது​மக்​களை சந்​திக்​கும் நிகழ்​வுக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதைத்​தொடர்ந்து நாளை மறுநாள் ஈரோடு மாவட்​டம் பெருந்​துறை செல்​லும் முதல்​வர் விஜய் அங்​குள்ள ஒரு தனியார் கல்​லூரி​யில் நடை​பெறவிருக்​கும் அரசு விழா​வில் பங்​கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்​களை சேர்ந்த பெண்​களுக்கு ரூ.1,110 கோடி​யில் நலத்​திட்ட உதவி​களை வழங்க உள்​ள​தாக அமைச்​சர் விஜய் பாலாஜி தெரி​வித்​துள்​ளார்.

அதன்​பின், நவ.14-ம் தேதி குழந்​தைகள் தினத்​தை​யொட்டி நெல்லை மாவட்​டம் அம்​பாசமுத்​திரம் அகஸ்தி​யர்​பட்டி பகுதி​யில் உள்ள அரசுப் பள்ளி ஒன்​றில் முதல்​வர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்​களுக்கு கேக் வழங்கி கொண்​டாட உள்​ளார். அதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு, கரூரிலும் அரசு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​பார் என தவெக தரப்​பில் கூறப்​படு​கிறது.

அரசி​யல் ரீதி​யாகப் பார்க்​கும்​போது, இந்​தப் பயணங்​கள் வெறும் அரசு விழாக்​கள் மட்​டுமன்றி, காலியாக உள்ள 5 சட்​டப்​பேரவை தொகுதி​களுக்​கான இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு அச்​சா​ர​மாக அமைந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. மேலும், இந்த 5 தொகுதி​களி​லும் தங்​களது வாக்​கு​வங்​கியை அடிமட்ட அளவில் பலப்​படுத்​து​வதற்​கான முக்​கிய நகர்​வாகவே கருதப்​படு​கிறது.

இடைத்தேர்தலுக்கு அச்சாரமாகும் முதல்வர் விஜய்யின் பயணம்: நாளை புதுக்கோட்டையில் ‘ரோடு ஷோ’
முதல்வர் விஜய் நவ.14-ல் அம்பாசமுத்திரம் பயணம்? - சூடுபிடிக்கிறது இடைத்தேர்தல் களம்

X