எம்.சி.ராஜா விடுதி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வர் விஜய்

தரமான உணவு வழங்குவதை கண்காணிக்க குழு
எம்.சி.ராஜா விடுதியில்ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்

எம்.சி.ராஜா விடுதியில்ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்

Updated on
1 min read

சென்னை: எம்​.சி.​ராஜா விடு​தி​யில் முதல்​வர் விஜய்​யின் ஆய்வுக்கு பின் மாணவர்​களின் கோரிக்​கையை நிறைவேற்​றும் வித​மாக, தரமான உணவு வழங்​கப்​படு​வதை கண்​காணிக்க குழு அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இரவு 12 மணி வரை மாணவர்​கள் விடு​திக்​குள் வர அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், அதிகாரிகள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை, சைதாப்​பேட்​டை​யில் உள்ள எம்​.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதி செயல்​பட்டு வரு​கிறது. இந்த விடுதி கடந்த திமுக ஆட்​சி​யில் 10 தளங்​களு​டன் ரூ.44.5 கோடி மதிப்​பில் நவீன வசதிகளு​டன் கட்​டப்​பட்​டது. இந்த விடு​தி​யில், சென்​னை​யில் பல கல்​லூரி​களில் பயிலும் மாணவர்​கள் தங்​கி​யுள்​ளனர்.

இங்கு அடிக்​கடி குடிநீர் வசதி, உணவின் தரம், பணி​யாளர் பற்றாக்​குறை உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களில் குறை​பாடு​கள் இருப்​ப​தாக மாணவர்​கள் தெரி​வித்து வந்​தனர். இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் இந்த விடு​திக்கு நேற்​று ​முன்​தினம் சென்று திடீர் ஆய்வு மேற்​கொண்​டார்.

மேலும், மாணவர்​களிடம் குறை​கள் மற்​றும் தேவை​களை கேட்டறிந்​தார். அப்​போது, விடு​தி​யில் இருக்​கும் குறை​கள் மற்​றும் தேவை​களை முதல்​வரிடம் வேதனை​யுடன் மாணவர்​கள் எடுத்துரைத்​தனர். குறிப்​பாக, உடற்​கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்​டும். நவீன உடற்​ப​யிற்சி கூடம் அமைக்க வேண்​டும். உணவின் தரத்தை மேம்​படுத்த வேண்​டும் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுக்​களை​யும் முதல்​வரிடம் மாணவர்கள் வழங்​கினர்.

மாணவர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்ற வேண்​டும் என முதல்​வர், அமைச்​சர் மற்​றும் அதி​காரி​களுக்கு உத்தர​விட்​டார். இதையடுத்​து, பல மாற்​றங்​கள் விடு​தி​யில் செய்யப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதுகுறித்​து, சமூகநீ​தித் துறை​யின் மூத்த அதி​காரி ஒரு​வர் தெரிவித்​த​தாவது: மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கும் வகை​யில் விடு​தி​யின் உணவுப் பட்​டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்​ளது. இட்​லி, சப்​பாத்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்​ளது.

மாணவர்​களுக்கு தரமான உணவு வழங்​கப்​படு​வதை உறுதி செய்ய கண்​காணிப்பு குழு​வும் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன், மூடப்​பட்​டிருந்த வாலி​பால் மைதானம் மாணவர்​கள் பயன்​படுத்த திறக்​கப்​பட்​டுள்​ளது. மாணவர்​கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறி​னார்.

முதல்​வர் விஜய்​யின் திடீர் ஆய்​வுக்கு அடுத்த நாளே மாணவர்​கள் முன்​வைத்த முக்​கிய கோரிக்​கை​களில் சில​வற்​றுக்கு உடனடி தீர்வு காணப்​பட்​டிருப்​பது, மாணவர்​களிடையே வரவேற்​பை பெற்றுள்​ளது.

<div class="paragraphs"><p>எம்.சி.ராஜா விடுதியில்ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்</p></div>
அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in