அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பள்​ளிக்​கல்வி மற்​றும் தொடக்​கக் கல்வி இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக்கல்வி அலு​வலர்​களுக்கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை: அரசு, அரசு உதவிப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​கள் பயன்​பெறும் வகை​யில் பள்​ளி, வட்​டாரம், மாவட்​டம் மற்​றும் மாநில அளவில் கலைத் திரு​விழா போட்​டிகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. அதன்​படி நடப்பு கல்​வி​யாண்​டிலும் கலைத் திரு​விழா போட்​டிகள் ஜூலை 23-ம் தேதி தொடங்​கி, அக்​.28-ம் தேதிவரை நடத்​தப்பட உள்​ளன.

1, 2-ம் வகுப்​பு, 3 முதல் 5-ம் வகுப்​பு, 6 முதல் 8-ம் வகுப்​பு, 9, 10-ம் வகுப்​பு, 11, 12-ம் வகுப்பு என 5 பிரிவு​களாக வயதுக்கு ஏற்ப பிரிக்​கப்​பட்டு போட்​டிகள் நடை​பெற உள்​ளன. இதில் கதை கூறு​தல், வண்​ணம் தீட்​டு​தல், மாறு​வேடம், பேச்​சு, திருக்​குறள் ஒப்​பு​வித்​தல், மெல்​லிசை, நாட்​டுப்​புற நடனம், பரத​நாட்​டி​யம், மணற்​சிற்​பம், வில்​லுப்​பாட்​டு, கிராமிய நடனம், நகைச்​சுவை,பலகுரல் பேச்​சு, பம்​பை, உடுக்கை, பறை, மிருதங்​கம், டிரம்​ஸ், வயலின், நாதஸ்​வரம், கீ போர்டு இசைத்​தல், பொம்​மலாட்​டம் உட்பட பல்​வேறு வகை​களில் போட்​டிகள் நடத்​தப்​படும்.

முதல்​கட்​ட​மாக பள்ளி அளவி​லான போட்​டிகள் ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி வரை​யும், குறு​வட்ட அளவி​லான போட்​டிகள் ஆக.19 முதல் 21-ம் தேதி வரை​யும் நடை​பெறும். அதைத் தொடர்ந்து வட்​டார அளவி​லான போட்​டிகள் ஆக.11 முதல் செப்​.9-ம் தேதி வரை​யும், மாவட்ட அளவி​லான போட்​டிகள் அக்.8 முதல் 15-ம் தேதி வரை​யும், மாநில அளவி​லான போட்​டிகள் அக்.7 முதல் 28-ம் தேதி வரையும் நடத்​தப்​படும்.

மாநில அளவி​லான போட்​டிகளில் வெற்றி பெறு​பவர்​களுக்கு ‘கலை​யரசன்’, ‘கலை​யரசி’ விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​படும். மேலும், தரவரிசை​யில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்​கள் வெளி​நாடு​களுக்கு கல்​விச் சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள். இதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களைப் பின்​பற்றி போட்​டிகளை சிறந்த முறை​யில் நடத்தி முடிக்க தேவை​யான பணி​களை அந்​தந்த மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள்​ மேற்​கொள்ள வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் ஆக.4 டெல்லி பயணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in