முதல்வர் விஜய், அன்புமணி பரஸ்பரம் வாழ்த்து

முதல்வர் விஜய், அன்புமணி பரஸ்பரம் வாழ்த்து
Updated on: 
1 min read

சென்னை: அன்புமணிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் வெற்றிக்கு முதல்வர் விஜய்க்கு, அன்புமணியும் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

பாமக தலைவர் அன்புமணி தனது 58-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து, அன்புமணியை முதல்வர் விஜய், தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதற்கு முதல்வர் விஜய்க்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் விஜய், அன்புமணி பரஸ்பரம் வாழ்த்து
21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்கம் கைவிடப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in