கால்நடை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கால்நடை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
Updated on
1 min read

சென்னை: ​கால்​நடை மருத்​துவப் படிப்​புக்கு பிளஸ்2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடை​பெறு​வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடிக்கு தமிழக முதல்​வர் விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய கால்​நடை மருத்​துவ கவுன்​சில் சட்​டம், 1984-ன் விதி​முறை​களின்​படி, அனைத்து கால்​நடை மருத்​துவ கல்​லூரி​களி​லும் கால்​நடை மருத்​துவ அறி​வியல் மற்​றும் கால்​நடை பராமரிப்பு பட்​டப்​படிப்​பிபுக்​கான மாணவர் சேர்க்​கை​யானது, பொது நுழைவுத் தேர்​வின் அடிப்​படை​யில் மையப்​படுத்​தப்​பட்ட கலந்​தாய்வு முறை மூலம் இடங்​களை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும் என இந்​திய கால்​நடை மருத்​துவ கவுன்​சில் பரிந்​துரைத்​துள்​ளது.

அதற்கு மாற்று ஏற்​பா​டாக, 2026-27-ம் கல்​வி​யாண்டு முதல் தனி​யாக நுழைவுத்​தேர்வு நடத்த முடி​யாத பட்​சத்​தில், நீட் தேர்​வின் தரவரிசை பட்​டியலின் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெற வேண்​டும் என இந்​திய கால்​நடை மருத்​துவ கவுன்​சில், மாநிலங்​களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளது. இந்த முன்​மொழி​வு, தமிழகத்​துக்கு பல்​வேறு கடுமை​யான பாதிப்​பு​களை ஏற்​படுத்​தும்.

கால்​நடை மருத்​து​வக் கல்வி என்​பது வெறும் தொழில்​சார் படிப்பு மட்​டுமல்ல, மாநிலத்​தின் கால்​நடை பராமரிப்பை வலுப்​படுத்​து​வதற்​கும், லட்​சக்​கணக்​கான கிராமப்​புற குடும்​பங்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காப்​ப​தற்​கு​மான நமது முயற்​சிகளின் அடித்​தள​மாகும். இன்று கால்​நடை மருத்​துவ கல்​வி​யில் சேர்க்கை பெறும் மாணவர்​களே, வரும் ஆண்​டு​களில் நமது விவ​சா​யிகளுக்கும், கிராமங்​கள் மற்​றும் கால்​நடைப் பராமரிப்​புத்​துறைக்​கும் சேவை செய்​யும் கால்​நடை மருத்​து​வர்​களாக​வும் உரு​வெடுக்​கிறார்​கள்.

தமிழகம், பிளஸ்2 தேர்​வில் மாணவர்​கள் பெறும் மதிப்​பெண்​களின் அடிப்​படை​யிலேயே தொழிற்​கல்​விபடிப்​பு​களுக்​கான சேர்க்கை முறையை பல தசாப்​தங்​களாக பின்​பற்றி வரு​கிறது. கால்​நடை மருத்​துவ படிப்​பு​களுக்​கான சேர்க்​கைக்கு நீட் தேர்வை அறி​முகப்​படுத்​து​வது பொருத்​த​மான​தாக இருக்​காது. இத்​தகைய நடை​முறை கால்​நடை மருத்​துவ கல்வி சேர்க்​கைக்கு பாதிப்​பு​களை ஏற்​படுத்​தும்.

அதனால், இந்த விவ​காரத்​தில் தாங்​கள் (பிரதமர்) தனிப்​பட்ட முறை​யில் தலை​யிட வேண்​டும். இந்​திய கால்​நடை மருத்​துவ கவுன்​சில் தனது முடிவை மறு​பரிசீலனை செய்ய அறி​வுறுத்​து​மாறும், பிளஸ்2 மதிப்​பெண்​களின் அடிப்​படை​யில் கால்​நடை மருத்​துவ அறி​வியல் மற்​றும் கால்​நடை பராமரிப்பு பட்​டப்​படிப்​புக்​கான சேர்க்​கையை தொடரவோ அல்​லது மாணவர் சேர்க்கை அளவு​கோல்​களை அந்​தந்த மாநில அரசுகளே தீர்​மானிக்​கவோ அனு​ம​திக்க வேண்​டும்.

இக்​கோரிக்​கை​யைக் கனிவுடன் பரிசீலித்​து, கால்​நடை மருத்​து​வக் கல்​வியை அனை​வரும் சமமாக பெறு​வதை உறுதி செய்ய வேண்​டும். கிராமப்​புற மற்​றும் சமூகரீ​தி​யாக பின்​தங்​கிய பின்​னணியை கொண்ட மாணவர்​களுக்​கான வாய்ப்​பு​களை பாது​காக்க வேண்​டும். நமது கூட்​டாட்சி அமைப்​பிற்​குள் மாநிலங்​களின் தங்​களுக்​கான சட்​டபூர்வ கொள்கை முடிவு​களை எடுக்​கும்​ நிலை​யை உறு​தி​செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​து உள்​ளார்.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
கர்நாடகா செல்ல முடிவெடுத்தது ஏன்? - பேரவையில் உதயநிதியின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in