திமுக அரசின் சாதனைகள் குறித்து இடைவிடாது பிரச்சாரம் செய்ய தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திமுக அரசின் சாதனைகள் குறித்து இடைவிடாது பிரச்சாரம் செய்ய தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Updated on
1 min read

சென்னை: திமுக அரசின் சாதனை​களை​யும், அதனால் தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு குடும்​பத்​தினருக்​கும் கிடைத்​துள்ள பயன்​களை​யும் இடை​வி​டாது பிரச்​சா​ரம் செய்​யும் பணியை ஒவ்​வொரு​வரும் மேற்​கொள்ள வேண்​டும் என்று திமுக தொண்​டர்​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்ட மறு​நாளே மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்தை நடத்​தி, தேர்​தல் பணி​களை எப்​படி மேற்​கொள்ள வேண்​டும் என்​பதை உங்​களில் ஒரு​வ​னான நான், உங்​களின் குரலாக எடுத்​துச் சொன்​னேன். வெற்றி நிச்​ச​யம்.

அதற்​கான இலக்கை அடைய சமரசமின்றி உழைப்​பது ஒன்றே லட்​சி​யம். அந்த உறு​தி​யுடன்​தான் திமுக தனது தோழமைக் கட்​சிகள் அடங்​கிய மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யுடன் 2026 சட்​டப்​பேரவை தேர்​தல் களத்தை சந்​திக்​கிறது.

சொன்​னதைச் செய்​யும் திமுக அரசு, சொல்​லாத திட்​டங்​களை​யும் நிறைவேற்​றி​யுள்​ளது. 2026 சட்​டப்​பேரவை தேர்​தல் களத்​துக்​கான திமுக​வின் தேர்​தல் அறிக்கை வெகு விரை​வில் வெளி​யாக உள்​ளது.

கடந்த 5 ஆண்​டு​களில் நாட்​டில் எந்த மாநில​மும் செய்ய முடி​யாத சாதனை திட்​டங்​களை​யும், பல மாநிலங்​கள் பின்​பற்​றக்​கூடிய முதன்​மை​யான திட்​டங்​களை​யும் திமுக அரசு நிறைவேற்​றி​யுள்​ளது.

இந்த சாதனை​களை​யும், அதனால் தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு குடும்​பத்​தினருக்​கும் கிடைத்​துள்ள பயன்​களை​யும், அவர்​களது வாழ்​வில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றங்​களை​யும் இடை​வி​டாது பிரச்​சா​ரம் செய்​யும் பணியை ஒவ்​வொரு​வரும் மேற்​கொள்ள வேண்​டும்.

2026 தேர்​தல் களத்தை தமிழகம் அணிக்​கும், டெல்லி அணிக்​கு​மான தேர்​தல் என்று தொடர்ந்து கூறிவரு​கிறேன். டெல்​லி​யில் இருந்​து​தான் எல்​லாம் முடிவு செய்​யப்​படு​கிறது.

தமிழகத்​தில் உள்ள வீடு​களில் அடுப்பு எரிந்​தால் என்ன, எரி​யா​விட்​டால் என்ன என்ற மனநிலை​யுடன்​தான் எதிர்க்​கட்​சி​யினர் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

தமிழகத்​தின் உரிமை​களைக் காப்​ப​தற்​கும், தமிழகத்தை வளர்ச்​சிப் பாதை​யில் கொண்டு செல்​வதற்​கு​மான வலிமை திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணிக்கே உண்டு என்​பதே மக்​களின் உறு​தி​யான நம்​பிக்​கை.

அந்த நம்​பிக்​கையை உரு​வாக்​கியது திமுக ஆட்​சி. அதனால் நாம் மக்​களிடம் செல்​வோம். களத்​தில் நின்று வெற்​றியைப் பெறு​வோம். திமுக அரசு தொடர்ந்து அமைய 2026 தேர்​தல் களத்​தில் நிச்​ச​யம் வெல்​வோம் என உறு​தி​கொள்​கிறேன், உங்​களின் அயராத உழைப்​பின் மீதுள்ள நம்​பிக்​கை​யால்​. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் சாதனைகள் குறித்து இடைவிடாது பிரச்சாரம் செய்ய தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பில் சமூகத்துக்குதான் பொறுப்பு இருப்பதாக தட்டிக்கழிப்பதா? - கனிமொழிக்கு பாஜக கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in