குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பில் சமூகத்துக்குதான் பொறுப்பு இருப்பதாக தட்டிக்கழிப்பதா? - கனிமொழிக்கு பாஜக கண்டனம்

குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பில் சமூகத்துக்குதான் பொறுப்பு இருப்பதாக தட்டிக்கழிப்பதா? - கனிமொழிக்கு பாஜக கண்டனம்
Updated on
1 min read

சென்னை: குழந்தைகள், பெண்​களுக்​கான பாது​காப்பை உறுதி செய்​வ​தில் சமூகத்​துக்​கு​தான் பொறுப்பு இருப்​ப​தாக கூறி தட்​டிக்​கழிப்​பதா என்று கனி​மொழி எம்​.பி.க்கு தமிழக பாஜக கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

திமுக எம்​.பி. கனி​மொழி தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருந்​த​தாவது: விளாத்​தி​குளம் மாணவி கொலை வழக்​கில் குற்​ற​வாளியை காவல்துறை கைது செய்​துள்​ளது.

அந்த சமூக விரோதி உச்​சபட்ச தண்​டனை பெறுவதை உறு​தி​செய்வதோடு, பாதிக்​கப்​பட்ட மாணவியின் குடும்​பத்​துக்கு உரிய நீதி கிடைக்​க​வும், இத்​துயரில் இருந்து அவர்​கள் மீண்டு வரவும் துணை​யாக இருப்​போம்.

குற்​ற​வாளி​கள் தண்​டிக்​கப்​படு​வதை சட்​டம் உறு​தி​செய்​யும். ஆனால், குழந்தைகள், பெண்​களுக்​கான பாது​காப்​பான சூழலை ஒரு சமூக​மாக நாம் அனை​வரும் சேர்ந்தே உறு​திப்​படுத்த முடி​யும். இவ்​வாறு அவர் தெரி​வித்​திருந்​தார்.

இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில், தமிழக பாஜக தலைமை செய்​தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி கூறி​யுள்​ள​தாவது: குற்​ற​வாளி​கள் குற்​றச் செயல்​களில் ஈடு​ப​டா​மல் தடுப்​பதே காவல் துறை​யின் கடமை.

சட்​டம் - ஒழுங்கு சீர்​குலை​யாமல் பார்த்​துக் கொள்​வதே அவர்​களது வேலை. சமூகத்​தில் பலர் பலவித​மாக இருப்​பார்​கள். அவர்​களைக் கண்​காணித்து சட்​டங்​களை அமல்​படுத்​து​வதும், சூழலுக்கு ஏற்ற சட்​டங்​களை உரு​வாக்​கு​வதும் மாநில அரசின் பொறுப்​பு.

மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வ​தாக வாக்​குறுதி அளிப்​ப​தால்​தான் நீங்​கள் சொல்​கிற சமூகம் உங்​களை ஆளவைத்​தது.

ஆனால், 5 ஆண்​டு​கள் உங்​கள் வாக்​குறு​தி​களை காற்​றில் பறக்க விட்​டு​விட்​டு, இப்​போது சமூகத்​துக்​கு​தான் பொறுப்​பு இருக்​கிறது என்​று தட்​டிக்​கழிப்​பது​தான்​ தி​ரா​விட ​மாடல்​. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பில் சமூகத்துக்குதான் பொறுப்பு இருப்பதாக தட்டிக்கழிப்பதா? - கனிமொழிக்கு பாஜக கண்டனம்
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி4 நுழைவாயில் மார்ச் 23 முதல் மூடல்: சென்னை மெட்ரோ தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in