திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட பாலம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட பாலம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
Updated on
1 min read

சென்னை: கிழக்கு கடற்​கரை சாலை​யில் திரு​வான்​மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடி மதிப்​பில் அமைக்​கப்பட உள்ள மேம்​பாலப் பணி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழ்​நாடு மாநில நெடுஞ்​சாலை ஆணையம் மூலம் கிழக்குகடற்​கரை சாலை​யில் திரு​வான்​மியூர் முதல் உத்தண்டி வரை, 13.30 கி.மீ நீளத்​துக்கு ரூ.2,100 கோடி மதிப்​பில், சாலை மேம்​பாலம் அமைக்க முதல்​வர் ஸ்டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்த மேம்​பாலம், திரு​வான்​மியூரில் ஈசிஆர் - எல்பி சாலை சந்​திப்​புக்கு முன்​பாக தொடங்​கி, உத்தண்டியில் முடிவடை​யும். இரு​வழிப் போக்​கு​வரத்​துக்​காக 17.25 மீட்​டர் அகலத்​துடன், 5.5 மீட்​டர் உயரத்​தில், நான்கு வழித்​தட​மாக அமைக்​கப்​படு​கிறது.

திரு​வான்​மியூர் வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​கம், நீலாங்​கரை மற்​றும் அக்​கரை போன்ற இடங்​களில் இருந்து மேலேறும் மற்​றும் கீழிறங்​கும் சாய்​வுப் பாதைகள் அமைக்​கப்​படு​கின்​றன.

மேலும், அக்​கரை, நீலாங்​கரை மற்​றும் எல்பி சாலை போன்ற முக்​கிய சந்​திப்​பு​கள் மேம்​படுத்​தப்​படு​வதுடன், சில பகு​தி​களில் தற்​போதுள்ள சாலைகள் ஆறு​வழிச் சாலைகளாக அகலப்​படுத்​தப்பட உள்​ளன.

தொழில்​துறை சார்​பில், நெல்​லை, விருதுநகர், ஈரோடு மாவட்​டங்​களில் ரூ.117.65 கோடி​யில் 1,800 தகவல் தொழிற்​நுட்ப வல்​லுநர்​களுக்கு புதிய வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் வகை​யில் டைடல் நியோ பூங்​காக்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

மேலும், ரூ.931 கோடி உறு​தி​செய்​யப்​பட்ட முதலீட்​டில் 823 வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் வகை​யில் தைவான் நாட்​டைச் சேர்ந்த அடாடா டெக்​னாலஜி நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான அடாடா செமிகண்​டக்​டர் நிறு​வனம் தகவல் சேமிப்பக தயாரிப்​பு​கள் மற்​றும் குறைக்​கடத்தி உற்​பத்தி ஆலை அமைப்​ப​தற்​கும் அடிக்​கல் நாட்​டி​னார்.

அதே​போல், ஈராஸ் ஜென் ஏஐ நிறு​வனம் சார்​பில் தமிழகத்​தில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள ‘லார்ஜ் கல்ச்​சுரல் வாய்ஸ் மாடல்​ஸ்’ திட்​டத்​தை​யும் முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார்.

பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில், 217 அரசுப் பள்​ளி​களில் ரூ.296.62 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள வகுப்​பறை, ஆய்​வகம், குடிநீர் வசதி​கள், சுற்​றுச்​ சுவர் உள்​ளிட்ட இதர கட்​டிடங்​கள் மற்​றும் ரூ.5.65 கோடி​யில் ராணிப்​பேட்டை மைய நூல​கம் மற்​றும் அலு​வல​கக் கட்​டிடம் ஆகிய​வற்றை முதல்​வர் திறந்து வைத்​தார்.

மேலும், ரூ.98.26 கோடி செல​வில் கடலூரில் கட்​டப்​பட​வுள்ள அஞ்​சலை அம்​மாள் அறி​வுலக கட்​டிடத்​துக்கு அடிக்​கல்​ நாட்​டி​னார்​. இந்​நிகழ்ச்​சிகளில்​, அமைச்​சர்​கள்​, அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட பாலம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு இலவச பேருந்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in