முதல்வர் ஸ்டாலின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

அண்ணா அறிவாலயத்தில், கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில், கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated on
2 min read

சென்னை: தமிழக முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தனது 73-வது பிறந்​த​நாளை நேற்று உற்​சாக​மாகக் கொண்​டாடி​னார். குடும்​பத்​தினர், அமைச்​சர்​கள், எம்​எல்​ஏ-க்​கள், முக்​கிய தலை​வர்​கள், லட்​சக்​கணக்​கான தொண்​டர்​களின் வாழ்த்து மழை​யில் நனைந்​தார்.

முதல்​வர் ஸ்டா​லினின் 73-வது பிறந்​த​நாள் கொண்​டாட்​டங்​கள் ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் அதி​காலை​யிலேயே தொடங்​கின. முதல்​வரின் மனைவி துர்கா ஸ்டா​லின் மற்​றும் குடும்​பத்​தினர் அவருக்கு மாலை அணி​வித்து வாழ்த்து தெரி​வித்​தனர்.

குடும்​பத்​தினர் முன்​னிலை​யில் முதல்​வர் கேக் வெட்டி மகிழ்ச்​சி​யைப் பகிர்ந்து கொண்​டார். இந்த நிகழ்​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், கிருத்​திகா உதயநி​தி, மகள் செந்​தாமரை, மரு​மகன் சபரீசன் மற்​றும் பேரக்​குழந்​தைகள் உடனிருந்து வாழ்த்​தினர். இதனைத் தொடர்ந்து துரை​முரு​கன் உள்​ளிட்ட மூத்த அமைச்​சர்​கள் சந்​தித்து வாழ்த்​துக் கூறினர்.

பின்​னர் அண்​ணா, கருணாநிதி ஆகியோரின் நினை​விடங்​களில் முதல்​வர் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். அங்​கிருந்த கட்சி நிர்​வாகி​கள் அவருக்கு புத்​தகங்​களை வழங்கி வாழ்த்​தினர். பிறகு நினை​விடப் பணி​யாளர்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை முதல்​வர் வழங்​கி​னார். பின்​னர் வேப்​பேரி பெரி​யார் திடலுக்​குச் சென்ற முதல்​வரை, திரா​விடர் கழகத் தலை​வர் வீரமணி வரவேற்​றுப் புத்​தகம் வழங்​கி​னார். அங்கு பெரி​யார் நினை​விடத்​தில் மலர் வளை​யம் வைத்து முதல்​வர் வணங்​கி​னார்.

அதன்​பிறகு, கோபாலபுரம் இல்​லத்​துக்​குச் சென்ற முதல்​வர், அங்​குள்ள கருணாநிதி படத்​துக்கு மலர் தூவி வணங்​கி​னார். தாயார் தயாளு அம்​மாளிடம்ஆசி பெற்​றார். பின்​னர் சிஐடி காலனி இல்​லம் சென்ற அவரை சகோ​தரி கனி​மொழி எம்​.பி. வரவேற்​றார்.

அங்கு ராஜாத்தி அம்​மாளிடம் வாழ்த்​துப் பெற்​றதோடு, கருணாநிதி படத்​துக்கு மரி​யாதை செலுத்​தி​னார். அதன்​பிறகு திமுக தலைமை அலு​வல​கம் சென்ற முதல்​வருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. மேள​தாளங்​கள் முழங்க, பட்​டாசுகள் வெடிக்​கத்தொண்​டர்​கள் விண்​ண​திர முழக்​கமிட்டு அவரை வரவேற்​றனர்.

மூத்த நிர்​வாகி​கள் முன்​னிலை​யில் முதல்​வர் பிரம்​மாண்ட கேக் வெட்​டி​னார். பல்​வேறு பகு​தி​களில் இருந்து வந்​திருந்த ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் வரிசை​யில் நின்று மாலைகள், பொன்​னாடைகள், புத்​தகங்​கள், பூக்​கூடைகளை வழங்கி தங்​களது அன்பை வெளிப்​படுத்​தினர். மேலும் கூட்​டணி கட்​சி​யினரும் முதல்​வரை சந்​தித்து தங்​களது வாழ்த்​துக்​களை தெரி​வித்​தனர்.

இவர்​கள் தவிர குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி கடிதம் மூலம் பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்​ததோடு தொலைபேசி வாயி​லாக​வும் வாழ்த்​தினர்.

திர​வுபதி முர்​மு: கடவுள் உங்​களுக்கு நல்ல ஆரோக்​கி​யத்​தை​யும், மகிழ்ச்​சி​யை​யும் அளித்து இன்​னும் பல ஆண்​டு​கள் தேசத்​துக்கு தொடர்ந்து அர்ப்​பணிப்​புடன் சேவை செய்ய அருள்​புரி​வா​ராக.

பிரதமர் மோடி: நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்​கிய​மும் பெற்று வாழ வாழ்த்​துகிறேன்.

மக்​களவை எதிர்க்​கட்​சித்தலை​வர் ராகுல் காந்​தி: நல்ல ஆரோக்​கி​யம், வலிமை, நீண்ட ஆயுள் பெற்று தமிழக மக்​களுக்கு அர்ப்​பணிப்​புடன் சேவை செய்ய வேண்​டும்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: நல்ல ஆரோக்​கி​யத்​துடன், மகிழ்ச்​சி​யாக​வும் நீண்ட ஆயுளு​ட​னும் வாழ பிரார்த்​திக்​கிறேன்.

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு: மக்​களுக்​குச் சேவை செய்​வதற்​காக அர்ப்​பணிப்​புடன் நீண்ட ஆயுள் பெற பிரார்த்​திக்​கிறேன்.

கேரளம் முதல்​வர் பின​ராயி விஜயன்: நாட்​டின் ஜனநாயக மற்​றும் மதச்​சார்​பற்ற நெறி​முறை​களைப் பிரி​வினை​வாத சக்​தி​களுக்கு எதி​ராகப் பாது​காப்​ப​தில் நீங்​கள் கொண்​டுள்ள உறு​தியை நான் வணங்​கு​கிறேன். நமது நாட்டை வரையறுக்​கும் அரசி​யல் அமைப்பு விழு​மி​யங்​களை நிலைநிறுத்த நாம் ஒன்​றிணைந்து நிற்​கும் வேளை​யில் இந்த ஆண்டு உங்​களுக்கு நல்ல ஆரோக்​கி​யம், மகிழ்ச்சி மற்​றும் மக்​களுக்​குச் சேவை செய்​வ​தில் தொடர்ச்​சி​யான வெற்​றியைப் பெற வாழ்த்​துகிறேன்.

இதே​போல் மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங், காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன் கார்​கே, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்​முகம், நடிகர் ரஜினி​காந்த், விசிக தலை​வர் திரு​மாவளவன், தேமு​திக பொருளாளர் சுதீஷ், கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன், மமக தலை​வர் ஜவாஹிருல்​லா, ஆம் ஆத்மி மாநில தலை​வர் வசீகரன், தவாக தலை​வர் வேல்​முரு​கன், மநீம தலை​வர் கமல்​ஹாசன், தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, முன்​னாள் முதல்​வர் ஓபிஎஸ், பாமக தலை​வர் அன்​புமணி, முன்​னாள் பாஜக மாநில தலை​வர் தமிழிசை என பலரும் வாழ்​த்து தெரிவித்​துள்ளனர்.

<div class="paragraphs"><p>அண்ணா அறிவாலயத்தில், கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.</p></div>
டெல்லி குடும்பத்தின் ATM ஆக புதுச்சேரியை பயன்படுத்தியது காங்கிரஸ் - மோடி குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in