காரைக்குடியில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மோதல்: திமுக துணை மேயர், அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு

காரைக்குடியில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மோதல்: திமுக துணை மேயர், அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு
Updated on
1 min read

காரைக்குடி: ​காரைக்​குடி​யில் தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யின்​போது நடந்த மோதல் தொடர்​பாக திமுக பேரூ​ராட்​சித் தலை​வர், துணை மேயர், அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ உட்பட 137 பேர் மீது வழக்​குப் பதியப்பட்டது.

சிவகங்கை மாவட்​டம், காரைக்​குடி மகர்​நோன்பு திடலில் நேற்​று​முன்​தினம் இரவு தனி​யார் தொலைக்​காட்சி சார்​பில் தேர்​தல் விவாத நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில், திமுக மாவட்ட துணைச் செய​லா​ள​ரும் திருப்​புவனம் பேரூ​ராட்​சித் தலை​வரு​மான சேங்​கை​மாறன், அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ உமாதேவன், நாம் தமிழர் கட்சி மாநில நிர்​வாகி இடும்​பாவனம் கார்த்​திக் ஆகியோர் பங்​கேற்​றனர்.

அப்​போது அதி​முக, திமுக தரப்​பினர் தங்​களது ஆட்​சிக்​காலத்​தில் நடை​பெற்ற வளர்ச்​சித் திட்​டங்​களை எடுத்​துரைத்​தனர். தொடர்ந்து இடும்​பாவனம் கார்த்​திக் பேசி​ய​போது தெரி​வித்த சில கருத்​துகளுக்கு திமுக கூட்​டணிக் கட்​சி​யினர் எதிர்ப்​புத் தெரி​வித்​தனர்.இதில், திமுக மாவட்ட துணைச் செய​லா​ள​ரும் திருப்​புவனம் பேரூ​ராட்​சித் தலை​வரு​மான சேங்​கை​மாறன், அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ உமாதேவன், நாம் தமிழர் கட்சி மாநில நிர்​வாகி இடும்​பாவனம் கார்த்​திக் ஆகியோர் பங்​கேற்​றனர்.

அப்​போது அதி​முக, திமுக தரப்​பினர் தங்​களது ஆட்​சிக்​காலத்​தில் நடை​பெற்ற வளர்ச்​சித் திட்​டங்​களை எடுத்​துரைத்​தனர். தொடர்ந்து இடும்​பாவனம் கார்த்​திக் பேசி​ய​போது தெரி​வித்த சில கருத்​துகளுக்கு திமுக கூட்​டணிக் கட்​சி​யினர் எதிர்ப்​புத் தெரி​வித்​தனர்.

அப்​போது அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ கே.கே.உ​மாதேவன் நாம் தமிழர் கட்​சிக்கு ஆதர​வாக பேசி​ய​தால் மோதல் ஏற்​பட்​டது. இதில் மூவர் காயமடைந்​தனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்​சி​யைச் சேர்ந்த இளங்கோ அளித்த புகாரின்பேரில், திமுக மாவட்​டத் துணைச் செய​லா​ளர் சேங்​கை​மாறன், துணை மேயர் குணசேகரன், மதி​முக மாவட்​டச் செய​லா​ளர் பசும்​பொன் மனோகரன் மற்​றும் திமுக மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள், நிர்​வாகி​கள், காங்​கிரஸ் நிர்​வாகி​கள் உட்பட 16 பேர் மீது காரைக்​குடி தெற்கு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​தனர்.

அதே​போல் திமுக துணை மேயர் குணசேகரன் அளித்த புகாரின்​பேரில், அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ கே.கே.உ​மா தேவன், நகரச் செய​லா​ளர் மெய்​யப்​பன் மற்​றும் அதி​முக, பாஜக, நாம் தமிழர் கட்சி நிர்​வாகி​கள் உட்பட 121 பேர் மீது வழக்​குப் பதிந்​தனர்.

காரைக்குடியில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மோதல்: திமுக துணை மேயர், அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு
மாநிலங்களின் தொகுதி அளவை 30 ஆண்டுக்கு மாற்றக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in