கண்ணகி கோயிலில் மே 1-ம் தேதி சித்​திரை முழு நிலவு விழா ஏற்பாடுகள்

தமிழக-கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

கூடலூர்: மங்​கலதேவி கண்​ணகி கோயில் திரு​விழா முன்​னேற்​பாடு பணி​கள் குறித்த ஒருங்​கிணைப்​புக்​குழு கூட்​டம் இரு மாநில அதி​காரி​கள் தலை​மை​யில் தேக்​கடி​யில் நடை​பெற்​றது.

தேனி மாவட்​டத்​தின் தமிழக எல்​லை​யான கூடலூர் மேற்​குத் தொடர்ச்சி மலை​யின் விண்​ணேற்​றிப்​பாறை எனும் இடத்​தில் மங்​கலதேவி கண்​ணகி கோயில் அமைந்​துள்​ளது. இக்​கோ​யில் சித்​திரை முழு நிலவு விழா மே 1-ம் தேதி நடை​பெற உள்​ளது.

விழா நடத்​து​வது தொடர்​பாக ஒருங்​கிணைப்​புக்​குழு கூட்​டம் தேக்​கடி​யில் நடை​பெற்​றது. தேனி, இடுக்கி மாவட்​டங்​களின் ஆட்​சி​யர்​கள் ரஞ்​ஜீத்​சிங், தினேஷன்​ சேரு​வாட் ஆகியோர் தலைமை வகித்​தனர். இடுக்கி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் சாபூமத்​யூ, சார் ஆட்​சி​யர் அனுப்​கார்க் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

பக்​தர்​கள் வசதிக்​காக குமுளி​யில் இருந்து கோயிலுக்கு செல்ல ஜீப்​களை இயக்​கு​வது, குடிநீர், தற்​காலிக பந்​தல், கழிப்​பிட வசதி, பாதைகளை செப்​பனிடு​தல் உள்​ளிட்ட பல்​வேறு நடவடிக்​கைகள் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

மேலும் பளியன்​குடி வழி​யாக வரும் பக்​தர்​களுக்​கும் உரிய வசதி​களை செய்து தர முடிவு செய்​யப்​பட்​டது. பக்​தர்​கள் குமுளி​யில் இருந்து காலை 6 மணி முதல் பகல் 1.45 மணி வரை​யும், கோயி​லில் இருந்து மாலை 5.30 மணிக்​குள் வெளி​யேற​வும் நேரக் கட்​டுப்​பாடு விதிக்​கப்​பட்​டுள்​ளது.

ஸ்ரீவில்​லிப்​புத்​தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்​குநர் விவேக்​பரஸ்​நாத் யாதவ், பெரி​யாறு புலிகள் காப்பக துணை இயக்​குநர் லட்​சுமி, மாவட்ட வன அலு​வலர் கிரண், வட்​டாரப் போக்​கு​வரத்து துறை அலு​வலர் மாணிக்​கம் உட்பட பலர் கலந்து கொண்​டனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“ஸ்டாலினை பணியவைக்க மோடி, அமித் ஷாவால் முடியாது” - திருச்சியில் ராகுல் காந்தி பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in