ரூ.1,844 கோடியில் 11 சாலைகளை திறந்தார் முதல்வர்: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.212 கோடி திட்டங்கள் தொடக்கம்

ரூ.1,844 கோடியில் 11 சாலைகளை திறந்தார் முதல்வர்: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.212 கோடி திட்டங்கள் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் ரூ.1,844 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள 11 சாலைகள், நகராட்சி நிர்​வாகத் துறை சார்​பில் ரூ.212 கோடி​யில் 45 முடிவுற்ற திட்​டங்​களை முதல்வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யின்​கீழ் செயல்​படும் நகராட்சி நிர்​வாக இயக்​குநரகம் சார்​பில் ரூ.177.17 கோடி​யில் 35 முடிவுற்ற பணி​கள், பேரூ​ராட்​சிகள் இயக்​குநரகம் சார்​பில் ரூ.32.23 கோடி​யில் 9 முடிவுற்ற பணி​கள், சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.2.50 கோடி​யில் கட்​டப்​பட்ட பள்​ளிக் கட்​டிடம் ஆகிய​வற்றை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.16.49 கோடி​யில் 5 புதிய திட்​டப் பணி​கள், சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில் ரூ.25.79 கோடி​யில் 3 புதிய திட்​டப் பணி​கள், நகராட்சி நிர்​வாக இயக்​குநரகம் சார்​பில் ரூ.11.48 கோடி​யில் ஒரு திட்​டப் பணிக்​கும் முதல்​வர் அடிக்​கல் நாட்​டி​னார். நகராட்சி நிர்​வாக இயக்​குநரகத்​தின் அலு​வல​கப் பயன்​பாட்​டுக்​காக ரூ.3.28 கோடி மதிப்​பிலான 28 வாக​னங்​களை​யும் வழங்​கி​னார்.

சாலைகள் திறப்பு

சேலம், நாமக்​கல் மாவட்​டங்​களில் ரூ.985.18 கோடி​யில் புறவழிச் சாலை உட்பட 36 கி.மீ.க்கு நான்​கு​வழிச் சாலை​யாக மேம்​படுத்​தப்​பட்ட ஓமலூர் - சங்​ககிரி - திருச்​செங்​கோடு - பரமத்தி சாலை, நாமக்​கல் மாவட்​டத்​தில் ரூ.59.15 கோடி​யில் மேம்​படுத்​தப்​பட்ட அதே சாலை, ரூ.65.48 கோடி​யில் திருச்​செங்​கோட்​டுக்கு அமைக்​கப்​பட்ட புறவழிச் சாலை, கோவை​யில் ரூ.250 கோடி​யில் மேற்கு சுற்​று​வட்ட சாலை, ரூ.73.35 கோடி​யில் பொள்​ளாச்சி மேற்கு புறவழிச் சாலை, திரு​வண்​ணா​மலை​யில் ரூ.90 கோடி​யில் திரு​வத்​திபுரம் புறவழிச் சாலை ஆகிய​வற்றை முதல்​வர் திறந்து வைத்​தார்.

அதே​போல, அகலப்​படுத்தி உறு​திப்​படுத்​தப்​பட்ட வகை​யில் ரூ.59 கோடி​யில் திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஆற்​காடு - திண்​டிவனம் சாலை, ரூ.50 கோடி​யில் காஞ்​சிபுரம் - வந்​த​வாசி சாலை, ரூ.87.69 கோடி​யில் திருப்​பூர் மாவட்​டம் பழனி - தாராபுரம் சாலை, ரூ.124 கோடி​யில் இரு பகு​தி​களாக அமைக்​கப்​பட்​டுள்ள திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி சுற்​று​வட்ட சாலை என மொத்​தம் ரூ.1,843.85 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள 11 சாலைகளை முதல்​வர் திறந்து வைத்​தார்.

முன்னாள் ராணுவத்தினர் நன்றி

செங்​கல்​பட்டு மாவட்​டம் புனித தோமையர் மலை​யில் ரூ.35.45 கோடி​யில் முன்​னாள் ராணுவத்​தினர் விடு​தி, பயிற்சி மையம் கட்​டியதற்​காக முதல்​வர் ஸ்டா​லினை, முன்​னாள் ராணுவத்​தினர் சந்​தித்து நன்றி தெரி​வித்​தனர்.

இந்த நிகழ்​வில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, சேகர்​பாபு, மெய்​ய​நாதன், கயல்​விழி செல்​வ​ராஜ், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், மேயர் பிரி​யா, நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் தா.​கார்த்​தி​கேயன், நெடுஞ்​சாலைத் துறை செயலர் ஆர்​.செல்​வ​ராஜ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

ரூ.1,844 கோடியில் 11 சாலைகளை திறந்தார் முதல்வர்: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.212 கோடி திட்டங்கள் தொடக்கம்
ரூ.300 கோடி போதைப் பொருள் கடத்தியதாக 10 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in