ரூ.300 கோடி போதைப் பொருள் கடத்தியதாக 10 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

ரூ.300 கோடி போதைப் பொருள் கடத்தியதாக 10 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

Published on

ராமேசுவரம்: இந்​தி​யப் பெருங்​கடலில் 654 கிலோ போதைப் பொருட்​களை இலங்கை கடற்​படை​யினர் பறி​முதல் செய்து அந்​நாட்​டைச் சேர்ந்த சேர்ந்த 10 பேரை கைது செய்​தனர்.

இந்​தி​யப் பெருங்​கடலில் சந்​தேகத்​துக்​குரிய முறை​யில் பயணித்த ஒரு ஆழ்​கடல் மீன்​பிடி படகை இலங்கை கடற்​படை​யினர் கண்​டறிந்து திக்​கோ​விட்ட கடற்​படை முகா​முக்​குக் கொண்டு வந்​தனர்.

படகில் இருந்த 478 கிலோ ஐஸ் போதைப் பொருள் மற்றும் 176 கிலோ போதைப்​பொருளை கண்​டறிந்து பறி​முதல் செய்​யப்​பட்​டன. படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 10 பேரை கடற்​படை​யினர் கைது செய்​தனர்.

மேலும் 11 துப்​பாக்​கி​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இந்த போதைப்​பொருளின் சர்​வ​தேச மதிப்பு ரூ.300 கோடி என கணக்​கிடப்​பட்​டுள்​ளது. இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்​பட்​டன, கடத்​தலில் தொடர்​புடைய​ நபர்​கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்​பது குறித்து இலங்கை கடற்​படை​யினர் தீவிரமாக வி​சா​ரித்து வரு​கின்​றனர்​.

ரூ.300 கோடி போதைப் பொருள் கடத்தியதாக 10 பேர் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை
2 மூதாட்டிகளை கொன்று பணம், நகை கொள்ளை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in