விதிகளை மீறி பயன்படுத்திய 20 மின் மோட்டார்கள் பறிமுதல்: சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

சென்னை குடிநீர் வாரி​யம்

சென்னை குடிநீர் வாரி​யம்

Updated on
1 min read

சென்னை: சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில், அடை​யாறு மண்​டலத்​துக்கு உட்​பட்ட தரமணி, தந்தை பெரி​யார் நகர் பகு​தி​யில் ராம​சாமி தெரு, அஞ்​சுகம் அம்​மாள் தெரு, ராணியம்​மாள் தெரு, பார​தி​யார் தெரு மற்​றும் கட்​டபொம்​மன் தெரு ஆகிய இடங்​களில் உள்ள வீடு​கள் மற்​றும் வணிக விடுதிகளில் கள ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதில், குழாய்​கள் மூலம் வழங்​கப்​பட்டு வரும் குடிநீர் விநி​யோகம் தொடர்​பாக குடிநீர் வாரிய அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, வணிக நிறு​வனங்​கள் மற்​றும் தங்​கும் விடு​தி​களில் அதி உயர் மின் அழுத்த மோட்​டார்​கள் மூலம் சட்​ட​விரோத​மாக குடிநீர் உறிஞ்​சப்​படு​வது கண்​டறியப்​பட்​டது. அவ்​வாறு 20 எண்ணிக்​கையி​லான மின் மோட்​டார் இணைப்​பு​கள் துண்டிக்கப்பட்டு பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

மேலும், வீடு​களில் ஏதேனும் மின் அழுத்த மோட்​டார்​கள் மூலம் குடிநீர் குழாய்​களில் வரும் குடிநீர் உறிஞ்​சப்​படு​கிறதா என தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு அவ்​வாறு இருப்​பின் பறி​முதல் செய்​யப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்பட்டுள்​ளது.

<div class="paragraphs"><p><em>சென்னை குடிநீர் வாரி​யம்</em></p></div>
சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வாகனம் நிறுத்துவதில் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in