ரூ.5,038 கோடி வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை

ரூ.5,038 கோடி வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
Updated on
1 min read

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டம் கடந்த நிதி ஆண்​டில் ரூ.5,038 கோடி வரு​வாய் ஈட்​டி, சாதனை படைத்​துள்​ள​தாக ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திரசிங் தெரி​வித்​தார்.

சென்​னை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: கடந்த நிதி ஆண்​டில் (2025-26), சென்னை ரயில்வே கோட்​டம் ரூ.5,038 கோடி வரு​வாய் ஈட்டி சாதனை படைத்​துள்​ளது.

இது முந்​தைய ஆண்​டை​விட 9.26 சதவீதம் அதி​கம். நடப்பு நிதி ஆண்​டில் ஜூலை 31-ம் தேதி வரை ரூ.1,636.68 கோடி வரு​வாய் ஈட்​டி​யுள்​ளது. கடந்த நிதி ஆண்​டில் சரக்கு ஏற்​று​தல் 6.20 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. இவ்​​வாறு அவர்​ பேசி​னார்​.

ரூ.5,038 கோடி வருவாய்: சென்னை ரயில்வே கோட்டம் சாதனை
விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in