உதவி செவிலியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

உதவி செவிலியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் 2026- 27 ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கான (NM COURSE) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சியில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவிகள் இயக்குநர், தொற்று நோய் மருத்துவமனை, எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081 என்ற முகவரியில் நாளை (6ம் தேதி) முதல் வரும் 20ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் ரூ.50 பணமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உதவி செவிலியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: நகைக் கடையில் நான்கு மாதங்களாக சிறுக சிறுக 85 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in