சென்னை: நகைக் கடையில் நான்கு மாதங்களாக சிறுக சிறுக 85 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்

சென்னை: நகைக் கடையில் நான்கு மாதங்களாக சிறுக சிறுக 85 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்
Updated on
1 min read

சென்னை: சென்னை, வியாசர்பாடி, 14-வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் அன்குஷ் (33). இவர், அதே பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 4 மாதங்களாக இவரது கடைக்கு பர்தா அணிந்து வந்த 50 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் அடிக்கடி நகை வாங்குவது போல் வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கடை உரிமையாளர் அன்குஷ் கடையில் இருந்த நகை இருப்பு, விற்பனை குறித்து கணக்கு பார்த்த போது அதில் சுமார் 85 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அன்குஷ் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கடந்த 4 மாதங்களாக பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் சிறுக, சிறுக நகைகளை திருடிக் கொண்டு காரில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, அன்குஷ் இந்த சம்பவம் குறித்து, எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: நகைக் கடையில் நான்கு மாதங்களாக சிறுக சிறுக 85 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்
திருவள்ளூர்: தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு அகற்றும் பணி தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in