சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பேருந்து சாலை துறைக்கு ரூ.725 கோடி ஒதுக்கீடு

ரூ.200 கோடியில் பள்ளிகளுக்கு பாதுகாப்பான வழித் தடங்கள் அறிவிப்பு
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பேருந்து சாலை துறைக்கு ரூ.725 கோடி ஒதுக்கீடு
Updated on
2 min read

சென்னை: சென்னை மாநக​ராட்சி பட்ஜெட்டில், பேருந்து சாலை துறைக்கு ரூ.725 கோடி​யும், மழைநீர் வடி​கால் துறைக்கு ரூ.693 கோடி​யும் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. 50 கி.மீ தூரத்​துக்கு “பள்​ளி​களுக்​கான பாது​காப்​பான வழித் தடங்​கள்” ரூ.200 கோடி​யில் அமைக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை மாநக​ராட்சி மன்​றக் கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் மாநக​ராட்சி நிலைக்​குழு தலை​வர் (வரி விதிப்பு மற்​றும் நிதி) சர்​பஜெயா தாஸ் மாநக​ராட்சி பட்ஜெட்டை தாக்​கல் செய்​தார்.

அவரது பட்ஜெட் உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யில் 2026-27-ம் நிதி​யாண்​டின் வரவு செலவு திட்ட மதிப்​பீடு ரூ.6,040.97 கோடி​யாக இருக்​கும். 2026-27ம் நிதி​யாண்​டில் வரு​வாய் இனங்​களின் செலவு ரூ.6,146.29 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

சொத்து வரி நடப்பு நிதி​யாண்​டில் ரூ.2,300 கோடி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. இது வரும் நிதி​யாண்​டில் ரூ.2,450 கோடி​யாக உயரும். இது​போல, தொழில் வரி ரூ.600 கோடி இருக்​கும்.

பேருந்து சாலை துறைக்கு ரூ.725 கோடி, மழைநீர் வடி​கால் துறைக்கு ரூ.693 கோடி, திடக்​கழிவு மேலாண்மை துறைக்கு ரூ.323 கோடி, புதிய பாலங்​கள் கட்​டு​மானத்​துக்கு ரூ.130 கோடி, கட்​டிடங்​கள் துறைக்கு ரூ.400 கோடி, மின்​துறைக்கு ரூ.41 கோடி, கல்​வித் துறைக்கு ரூ.11 கோடி, சுகா​தா​ரத் துறைக்கு ரூ.4.30 கோடி, மருத்​துவ சேவை துறைக்கு ரூ.1.10 கோடி, சிறப்​புத் திட்​டங்​களுக்கு ரூ.85 கோடி, பூங்கா துறைக்கு ரூ.28 கோடி, மண்​டலங்​களுக்கு ரூ.267 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு உரை​யில் கூறப்​பட்​டுள்​ளது. முன்​ன​தாக, மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, பட்ஜெட் உரை​யில் புதிய அறி​விப்​பு​களை வெளி​யிட்​டார். அதன் விவரம் வரு​மாறு: சென்னை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட பள்​ளி​களில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவ- மாணவி​களுக்கு ரூ.1.90 கோடி மதிப்​பில் யோகா மற்​றும் தற்​காப்​புக்​கலைப் பயிற்சி அளிக்​கப்​படும். பள்ளி மாணவர்​களை அழைத்து வரவும், கல்​விச் சுற்​றுலா செல்​ல​வும் 11 புதிய பேருந்​துகள் ரூ.4 கோடி​யில் வாங்​கப்​படும்.

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு கோடை காலத்​தில் ஏற்​படும் நீர்ச்​சத்தை ஈடு​செய்ய மோர் வழங்​கப்​படும். 60 பூங்​காக்​களை அறி​வியல் பூர்​வ​மாக பொலிவேற்​றம் செய்​வதற்கு ரூ.60 கோடி​யில் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். அம்​பத்​தூர் ஏரி, மஞ்​சம்​பாக்​கம் ஏரி உள்​ளிட்ட 30 நீர்​நிலைகளை ரூ.100 கோடி மதிப்​பீட்​டில் சீரமைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​படும்.

பக்​கிங்​ஹாம் கால்​வாய் வழித்​தடத்​தில் நடை​பாதை, மிதிவண்​டிப் பாதை, நகர்ப்​புற பசுமை​யாக்​கல் திட்​டம் ரூ.45 கோடி​யில் மேற்​கொள்​ளப்​படும்.

மெட்​ரோ, எம்​.ஆர்​.டி.எஸ். மற்​றும் பேருந்து நிலை​யங்​களை இணைக்​கும் வகை​யில் 25 கி.மீ தூரத்​துக்கு நடை​பாதை மற்​றும் மிதிவண்​டிப் பாதை ரூ.50 கோடி மதிப்​பீட்​டில் அமைக்​கப்​படும்.

பள்​ளி​களுக்கு பாது​காப்​பான வழித் தடங்​கள் 50 கி.மீ தூரத்​துக்கு ரூ.200 கோடி​யில் அமைக்​கப்​படும். மின்ட்​சாலை - வண்​ணாரப்​பேட்டை மெட்ரோ மற்​றும் சேப்​பாக்​கம் - மெரினா இடையே பன்​முக போக்​கு​வரத்து ஒருங்​கிணைப்பு ரூ.40 கோடி மதிப்​பீட்​டில் அமைக்​கப்​படும்.

மெரினா கலங்​கரை விளக்​கம் முதல் அண்ணா நினை​விடம் வரை கயிறு வழித்​தடம் அமைக்​கப்​படும். நீர்​நிலைகளை கண்​காணிக்க ஏஐ உதவி​யுடன் ட்ரோன் ஆய்வு அமைப்பு ரூ.10 கோடி மதிப்​பீட்​டில் செயல்​படுத்​தப்​படும் என்​பது உள்பட 90 புதிய அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பேருந்து சாலை துறைக்கு ரூ.725 கோடி ஒதுக்கீடு
நாகர்கோவில் | வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 130 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்தவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in