நாகர்கோவில் | வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 130 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்தவர் கைது

நாகர்கோவில் | வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 130 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்தவர் கைது
Updated on
1 min read

நாகர்கோவில்: வெளி​நாட்​டில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி 130 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி​யில் ஈடு​பட்ட இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

வெளி​நாட்​டில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பணத்தை பெற்​றுக்​கொண்​டு, வேலை வாங்​கித் தராமலும், பணத்தை திருப்​பித் தராமலும் ஏமாற்​றிய​தாக கன்​னி​யாகுமரி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஆர்​.ஸ்​டா​லினிடம் பாதிக்​கப்​பட்ட சிலர் புகார் அளித்​தனர். எஸ்​.பி. உத்​தர​வின்​பேரில் குற்​றப் பிரிவு போலீ​ஸார் விசா​ரணை​யைத் தொடங்​கினர்.

இதில், கன்​னி​யாகுமரி மாதவபுரம் பிள்​ளை​யார் கோயில் தெரு​வைச் சேர்ந்த ராம்​குமார் மகன் சந்​தோஷ்(31) என்​பவர், மகா​தானபுரத்​தில் தனி​யார் ஏஜென்சி நடத்​தி, துபா​யில் உள்ள நிறு​வனத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாக தெரி​வித்​து, 130 பேரிடம் தலா ரூ.2 லட்​சம் முதல் ரூ.3 லட்​சம் வரை பெற்​றது தெரிய​வந்​தது.

மேலும், பணத்​தைப் பெற்​றுக்​ கொண்டு வேலைக்கு அனுப்​பாமலும், சிலரை விசிட்​டிங் விசா​வில் வெளி​நாட்​டுக்கு அனுப்பி ஏமாற்​றியதும் தெரிய​வந்​தது.

மதுரையில் பதுங்கல்... இவ்​வாறு 130 பேரிடம் பணம் பெற்​றுக்​கொண்டு ரூ.1.50 கோடி மோசடி செய்​துள்​ளார். இதையடுத்​து, மதுரை​யில் பதுங்​கி​யிருந்த சந்​தோஷை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இது தொடர்​பாக குமரி எஸ்​.பி. ஸ்டா​லின் கூறும்​போது, “பு​கார் பெற்ற 24 மணி நேரத்​துக்​குள் சந்​தோஷ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

அவரிடமோ அல்​லது அவரது நிறு​வனத்​திலோ யாரேனும் பணம் கொடுத்து ஏமாந்​திருந்​தால், குமரி மாவட்ட குற்​றப்​பிரி​வில் நேரடி​யாகவோ அல்​லது 94981 96976 என்ற எண்​ணிலோ தொடர்​பு​கொண்டு புகார் அளிக்​கலாம்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: வெளி​நாட்டு வேலை​வாய்ப்​பின் உண்​மைத் தன்மை மற்​றும் ஏஜென்ட்​டு​கள் குறித்து ஏதேனும் சந்​தேகம் இருந்​தால் 70103 63173 என்ற எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம். வேலை வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்று ஏமாற்​று​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

தொடர்ந்து இச்​செயல்​களில் ஈடு​படு​வோர் மீது குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

நாகர்கோவில் | வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 130 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்தவர் கைது
நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர் தற்கொலை முயற்சி: கட்டாய வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டத்தில் மேலாளர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in