சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் - கூடூர்மார்க் கத்தில் மீஞ்சூர் - பொன்னேரி இடையே பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் சேவை மார்ச் 10, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப் பூண்டிக்கு மார்ச் 10, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயில், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டி- சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 11, 13 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

மின்சார ரயில் ரத்து: அரக்கோணம் - ஜோலார் பேட்டை மார்க்கத்தில் பச்ச குப்பம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், மெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, காட்பாடி - ஜோலார்பேட் டைக்கு இன்று காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில், ஜோலார்பேட்டை - காட்பாடிக்கு இன்று நண்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகிய 2 ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in