15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்​திய வங்​கக்​கடல் முதல் கடலோர ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, உள் கர்​நாடகா வழி​யாக கடலோர கர்​நாடகா வரை சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரத்​தில் வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக, சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஒருசில இடங்​களில் இன்று இடி, மின்​னலுடன் மித​மானது முதல் கனமழை பெய்​யக்​கூடும்.

திருநெல்​வேலி, கோவை மாவட்ட மலைப் பகு​தி​கள், கன்​னி​யாகுமரி, நீல​கிரி, வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கனமழை பெய்​யக்​கூடும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in