கரூர் நெரிசல் வழக்கு: டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ 6 மணி நேரம் விசாரணை

 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Updated on
1 min read

சென்னை: கரூர் நெரிசலில் உயி​ரிழப்​பு​கள் தொடர்​பான வழக்​கில், டெல்​லி​யில் செந்​தில் பாலாஜி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசா​ரணை நடத்​தினர்.

கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி கரூரில் நடை​பெற்ற தமிழக வெற்​றிக் கழகத்​தின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். தமிழகத்​தையே உலுக்​கிய இந்​தச் சம்​பவம் குறித்து சிபிஐ விசா​ரணை மேற்​கொண்டு வரு​கிறது.

இந்த வழக்​கில் ஏற்​கெனவே தவெக தலை​வர் விஜய் 3 முறை டெல்​லி​யில் சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் ஆஜராகி விளக்​கம் அளித்​தார். இந்த துயர சம்​பவத்​துக்கு திமுக மற்​றும் செந்​தில் பாலாஜி​யின் ஆதர​வாளர்​களே காரணம் என தவெக தரப்​பில் குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது.

மேலும், சம்பவம் நடந்த அன்று இரவே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்​நிலை​யில், மார்ச் 17-ம் தேதி டெல்லி அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு செந்​தில் பாலாஜிக்கு சிபிஐ சம்​மன் அனுப்பியது.

அதன்படி செந்​தில் பாலாஜி நேற்று முன்​தினம் சென்​னை​யில் இருந்து டெல்லி சென்​றார். நேற்று காலை 11 மணிக்​குத் தொடங்​கிய விசா​ரணை​யில், சிபிஐ அதி​காரி​கள் கரூர் சம்​பவம் குறித்து அவரிடம் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர். அப்​போது, விஜய் மற்​றும் தவெக நிர்​வாகி​கள் மீதே குற்​றச்​சாட்டை முன்​வைத்து செந்​தில் பாலாஜி பதில்​களை அளித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசா​ரணை​யின் போது, செந்​தில் பாலாஜி அளித்த விளக்​கங்​கள் அனைத்​தை​யும் சிபிஐ அதி​காரி​கள் வீடியோ​வாக​வும், எழுத்​துப்​பூர்​வ​மாக​வும் பதிவு செய்தனர். மாலை 5 மணி அளவில்​ வி​சா​ரணை நிறைவடைந்​தது.

<div class="paragraphs"><p> செந்தில் பாலாஜி</p></div>
தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்: அர்ச்சனா பட்நாயக் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in