கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை தொட்டது

ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
ஒகேனக்கல் காவிரியாற்றில் செந்நிறத்தில் சீறிப்பாயும் புதுவெள்ளம்.

ஒகேனக்கல் காவிரியாற்றில் செந்நிறத்தில் சீறிப்பாயும் புதுவெள்ளம்.

Updated on
1 min read

தருமபுரி: கர்​நாடக மாநிலத்​தி​லுள்ள அணை​களில் இருந்து காவிரி​யில் திறக்கப்பட்ட தண்​ணீர் மாநில எல்லையான ஒகேனக்​கல்லை அடுத்த பிலிகுண்​டுலு​வில் நேற்று காலை வந்​தடைந்​தது.

நீர்வரத்து படிப்​படி​யாக அதி​கரித்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி​யாக உயர்ந்தது. நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால் ஒகேனக்​கல் ஆற்​றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்​துள்​ளது.

காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் மழையால் கர்​நாடகா மாநில அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. கபினி அணை முழு கொள்ளளவை எட்​டிய நிலை​யில் கடந்த 1-ம் தேதி முதல் உபரிநீர் காவிரி​யாற்​றில் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு திறக்​கப்​பட்ட தண்​ணீர் ஒகேனக்​கல்லை அடுத்​துள்ள தமிழக எல்​லை​யான பிலிகுண்​டுலு​வுக்கு நேற்று அதி​காலை வந்து சேர்ந்​தது.

இதன்​படி நேற்று முன்​தினம் விநாடிக்கு 500 கனஅடி​யாக பதி​வான நீர்​வரத்து நேற்று அதி​காலை 6 மணி அளவீட்​டின்​போது விநாடிக்கு 1,000 கனஅடி​யாக உயர்ந்​தது. தொடர்ந்து 7 மணி​யள​வில் விநாடிக்கு 8,000 கனஅடி​யாக​வும், காலை 10 மணி​யள​வில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி​யாக​வும் உயர்ந்​தது.

நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால் சுற்​றுலாப் பயணி​களின் பாது​காப்​புக் கருதி ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்​வாகம் தற்​காலிக தடை அறி​வித்​துள்​ளது. இதனால், நேற்று ஒகேனக்​கல் சுற்​றுலா வந்​தவர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர். அதே​போல, நீர்​வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியைக் கடக்​கும்​போது ஆறு மற்​றும் அருவி​களில் குளிக்​க​வும் தடை அறிவிக்​கப்​படும்.

நேற்று முன்​தினம் வரை சிறிதளவு தண்​ணீருடன் காணப்​பட்ட பிர​தான அருவி பகு​தி​யிலும், வறண்டு காணப்​பட்ட ஐவர் பாணி என அழைக்​கப்​படும் ஐந்​தருவி பகு​தி​யிலும் தற்போது வெள்​ளம் ஆர்ப்​பரித்​துச் செல்​கிறது. புதி​தாக வந்து சேர்ந்​துள்ள தண்​ணீர் என்​ப​தால் ஒகேனக்​கல்​லில் கலங்​கலாக செந்​நிறத்​தில் தண்​ணீர் சீறிப்​பாய்​கிறது.

<div class="paragraphs"><p>ஒகேனக்கல் காவிரியாற்றில் செந்நிறத்தில் சீறிப்பாயும் புதுவெள்ளம்.</p></div>
“நான் யாரையும் தவறாக பேசவில்லை; எனது பேச்சை திரித்துவிட்டனர்” - உதயநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in