தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி/பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 56-வது கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நேற்று டெல்​லி​யில் நடை​பெற்​றது. அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களின் நீர்​வளத்​துறை அதிகாரிகள் காணொலி வாயி​லாக பங்​கேற்​றனர்.

பின்​னர் தமிழக அரசின் சார்​பில், “காவிரி நீர் பங்​கீட்டு வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின்​படி வறட்சி காலத்​தில் செப்​டம்​பர் மாதத்​தில் தமிழகத்​துக்கு 7.8 டிஎம்சி தண்​ணீரை திறந்து​விட வேண்​டும்” என வலி​யுறுத்​தப்​பட்​டது.

இதற்கு ஆட்​சேபம் தெரி​வித்த கர்​நாடக அரசு, அம்​மாநிலத்​தில் பரு​வ​மழை சரி​யாக பெய்​ய​வில்​லை. எனவே நீரை திறக்க முடியாத நிலை நில​வுவ​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

இதனை ஏற்க மறுத்த காவிரி ஆணைய தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர், “தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடகா காவிரி​யில் திறந்​து​விட வேண்​டும். இதனை செப்​டம்​பர் 9-ம் தேதி(இன்​று) முதல் பிலிகுண்​டுலு சோதனை நிலை​யத்​தில் உறு​திப்​படுத்த வேண்​டும்” என உத்​தர​விட்​டார்.

தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதிக்குப் பதில் ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டம் செப்.25-ல் தொடக்கம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in