தவெக பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் மீது சென்னை, கடலூரில் வழக்கு

தவெக பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் மீது சென்னை, கடலூரில் வழக்கு
Updated on
1 min read

சென்னை: தவெக பெண் நிர்​வாகி​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசிய விவ​காரத்​தில் அப்​துல் கலாமின் முன்​னாள் ஆலோ​சகர் பொன்​ராஜ் மீது சென்​னை, கடலூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

முன்​னாள் குடியரசுத் தலை​வர் ஏ.பி.ஜே. அப்​துல் கலாமின் அறி​வியல் ஆலோ​சக​ராக​வும், தனிப்​பட்ட உதவி​யாள​ராக​வும் பணி​யாற்​றிய​வர் பொன்​ராஜ்.

இவர், டிவி விவாதங்​களி​லும், யூடியூப் சேனல்​களி​லும் அரசி​யல் கருத்​துகளை பேசி வரு​கிறார். அண்​மை​யில் தவெக குறித்து அவர் பேசிய வீடியோ​வில், கட்​சி​யின் பெண்​களை சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதற்கு கடும் எதிர்ப்​பு​கள் கிளம்​பியது. பொன்​ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கடந்த மார்ச் 26-ம் தேதி தவெக தலை​வர் விஜய் நேரில் சென்று டிஜிபி அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார்.

அதில், ‘தி​முக-​வின் அதீத ஆதர​வாள​ராக செயல்​பட்டு வரும் பொன்​ராஜ் தமிழகம் முழு​வதும் இருக்​கும் எனது அம்​மா, அக்​கா, தங்​கைகளான ஒட்​டுமொத்த தமிழ்​நாட்​டுப் பெண்​கள் இனத்​தையே கொச்​சை​யான அர்த்​தம் தொனிக்​கும் சொல்லை நேரடி​யாகவே பயன்​படுத்தி விமர்​சித்​துள்​ளார்.

இதனால், பொன்​ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என புகாரில் விஜய் தெரி​வித்​திருந்​தார். மேலும், தவெக பெண் நிர்​வாகி​களும் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தனர்.

இதுகுறித்து சென்னை மத்​திய குற்​றப் பிரி​வில் உள்ள சைபர் கிரைம் போலீ​ஸார் பொன்​ராஜ் மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

4 சட்​டப்​பிரி​வில்..

பொன்​ராஜின் சர்ச்சை பேச்சை கண்​டித்து தவெக கடலூர் கிழக்கு மாவட்ட செய​லா​ளர் ராஜ்கு​மார், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் கடந்த மார்ச்​சில் புகார் அளித்​தார்.

அந்த புகாரின் அடிப்​படை​யில் பொன்​ராஜ் மீது பெண்​களை இழி​வாக பேசி​யது உள்​ளிட்ட 4 சட்​டப்​பிரி​வின் கீழ் கடலூர் புதுநகர் போலீ​ஸார் நேற்​று வழக்​குப்​ பதிவு செய்​தனர்​.

தவெக பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் மீது சென்னை, கடலூரில் வழக்கு
தேர்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள்: ஆணையம் விசாரணை நடத்துவதாக திமுக எம்.பி. தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in