உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியின, பட்டியலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு

உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியின, பட்டியலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
Updated on
1 min read

சென்னை: உள்​ளாட்சி தேர்​தலில் பழங்குடியின மற்​றும் பட்​டியலினத்​தவர்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கக்​கோரி திமுக சார்​பில் தொடரப்​பட்ட வழக்கை முடித்து வைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக உள்​ளாட்சி தேர்​தலில் பழங்​குடி​யின மற்​றும் பட்​டியலினத்​தவர்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்​பட​வில்லை எனக்​கூறி திமுக சார்​பில் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், உள்​ளாட்சி தேர்​தல் அறி​விப்​பாணையை ரத்து செய்​து, உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்கி அதன்​பிறகு தேர்​தலை நடத்த உத்​தர​விட்​டது.

மேலும், உள்​ளாட்சி தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள் தங்​களது வேட்​புமனு​வில் குற்​றப் பின்​னணி உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் கட்​டா​யம் தெரிவிக்க வேண்​டும் என்​றும், குற்​றப் பின்​னணி குறித்த தகவல்​களை வேட்​புமனு​வில் தெரிவிக்க மறுத்​தால் வேட்​புமனுவை நிராகரிக்க வேண்​டும் எனவும் மாநில தேர்​தல் ஆணை​யத்​துக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்​தர​வி்ட்​டிருந்​தது.

நீண்ட கால​மாக நிலு​வை​யில் இருந்து வந்த இந்த வழக்கு நீதிபதி எம். தண்​ட​பாணி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது ஏற்​கெனவே இந்த வழக்​கில் உயர் நீதி​மன்​றம் விரி​வான உத்​தரவை பிறப்​பித்து விட்​ட​தாக மனு​தா​ரர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தர​விட்​டுள்​ளார்.

உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியின, பட்டியலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
2026-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in