எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை தாக்கியதாக வழக்கு - பெண் வழக்கறிஞருக்கு முன்ஜாமீன்

சென்னை உயர் நீதி​மன்​றம்

சென்னை உயர் நீதி​மன்​றம்

Updated on
1 min read

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பெண் டிக்கெட் பரிசோதகரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில், பெண் வழக்கறிஞருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக எழும்பூர் ரயில் நிலையத்தில் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞரான மாங்காட்டை சேர்ந்த மோகனாவிடம், பெண் டிக்கெட் பரிசோதகர் ஷல்மா பேகம் சோதனை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதையடுத்து இருவர் மீதும் எழும்பூர் போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி வழக்கறிஞர் மோகனா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘கடந்த ஜூலை 4-ம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு பேருந்து நிலையம் செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலைய நடைபாதையில் காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக கூறி என்னிடம் தகராறில் ஈடுபட்டார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என கூறியும் அவர் கேட்காமல் செல்போனை பறித்து தாக்கினார். அதை நான் தடுக்க முயற்சித்தேன். இந்நிலையில், போலீஸார் என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்’ என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், டிக்கெட் பரிசோதகர்தான் பெண் வழக்கறிஞரை முதலில் தாக்கியுள்ளார். மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை என்றார். அதையடுத்து நீதிபதி, வழக்கறிஞர் மோகனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>சென்னை உயர் நீதி​மன்​றம்</p></div>
தவெகவை ஆக்கிரமிக்கும் அதிமுகவினர்... அலறும் ‘அசல்’ நிர்வாகிகள்... - விஜய்யின் ‘ஆக்‌ஷன்’ என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in