அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு: புதுவை நீதிமன்றத்தில் ஆக. 21-க்கு தள்ளிவைப்பு

அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு: புதுவை நீதிமன்றத்தில் ஆக. 21-க்கு தள்ளிவைப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: சகோ​தரரை தாக்​கியது தொடர்​பான நிதி​யமைச்​சர் மரிய​வில்​சன் மீதான வழக்கு விசா​ரணையை புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் ஆக.21-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.

அமைச்​சர் மரிய​வில்​சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி புதுச்​சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோ​தரர் மரிய குளோத் வீட்​டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை​யும், அவரது மனைவி கெரோலினை​யும் தாக்​கிய​தாக லாஸ்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​திருந்​தனர்.

புதுச்​சேரி முதலா​வது குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் விசா​ரணை​யில் உள்ள இந்த வழக்​கில், குற்​றப்​பத்​திரிகை பெற ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய​வில்​சன் தொடர்ந்து ஆஜரா​காமல் இருந்து வந்​தார். இந்த நிலை​யில் இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி​யும், நீதி​மன்​றத்​தில் வெள்​ளியன்று ஆஜராவ​தில் இருந்து விலக்கு அளிக்​கக் கோரி​யும் மரிய​வில்​சன் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனு, நீதிபதி இளந்​திரையன் முன் விசா​ரணைக்கு வந்​த​போது, குடும்ப பிரச்​சினை தொடர்​பாக சமரசம் செய்ய தயா​ராக இருப்​ப​தாக அமைச்​சர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. இதை ஏற்று உயர் நீதி​மன்​றத்​தில் உள்ள சமரச தீர்வு மையத்​துக்கு வழக்கை அனுப்பி வைத்​தது.

இந்த நிலை​யில் புதுச்​சேரி ஜே.எம். 1 நீதி​மன்​றத்​தில் இவ்​வழக்கு விசா​ரணை ஆக. 18-க்கு தள்​ளிவைக்​கப்​பட்​டிருந்​தது. அதன்​படி நேற்று நீதித்​துறை நடு​வர் சேரலாதன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அமைச்​சர் தரப்பு வழக்​கறிஞர் ஆஜராகி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சமரச தீர்வு மையத்​தில் புதன்​கிழமை (இன்​று) வழக்கு விசா​ரணைக்கு வரு​வ​தால் மரிய வில்​ச​னால் வர இயல​வில்லை என்று குறிப்​பிட்​டார். இதையடுத்து இவ்​வழக்கு வரும் 21-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது.

அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு: புதுவை நீதிமன்றத்தில் ஆக. 21-க்கு தள்ளிவைப்பு
கணவர், அவரது உறவினர்கள் 7 பேரை கொன்ற வழக்கில் மனைவி உள்பட மூவருக்கு 8 ஆயுள் சிறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in