கணவர், அவரது உறவினர்கள் 7 பேரை கொன்ற வழக்கில் மனைவி உள்பட மூவருக்கு 8 ஆயுள் சிறை

மதுரை நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு
பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி

பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி

Updated on
1 min read

மதுரை: குடும்​பம் நடத்த வர மறுத்த கணவர் மற்​றும் அவரது உறவினர்​கள் 7 பேரை பெட்​ரோல் ஊற்றி எரித்​துக்​கொன்ற வழக்கில் மனைவி உள்பட 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்​டனை வழங்கி மதுரை நீதி​மன்​றம் முக்​கி​யத் தீர்ப்​பளித்​துள்​ளது.

மதுரை மாவட்​டம் உசிலம்​பட்டி அருகே உள்ள குமாரபுரத்​தைச் சேர்ந்​தவர் கண்​ணன் (25). இவருக்​கும் பாண்​டீஸ்​வரி (21) என்​பவருக்​கும் 2012-ல் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணம் முடிந்த சில நாட்​களி​லேயே கண்​ணன் சென்​னைக்​குச் சென்றார்.

அதன் பிறகு அவர் பாண்​டீஸ்​வரி​யுடன் குடும்​பம் நடத்தவில்​லை. பாண்​டீஸ்​வரி பல முறை அழைத்​தும் கண்​ணன் வர மறுத்​து​விட்​டார். இதையடுத்து ஊர் பஞ்​சா​யத்​தார்​களை வைத்து இருதரப்​பிலும் பேசப்​பட்​டது. இதில் கண்​ணன் சேர்ந்து வாழ வேண்​டும் என அறி​வுறுத்​தி​யுள்​ளனர். இதனை​யும் ஏற்க மறுத்த கண்​ணன் குடும்​பம் நடத்த வரவில்லை. இதையடுத்து இரு​வரும் நீதி​மன்​றம் சென்று பிரச்சினையை தீர்த்​துக்கொள்ள அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

பெட்ரோல் ஊற்றி...

இந்​நிலை​யில் கடந்த 2015 மே 20 அன்று இரவு கண்​ணன், அவரது வீட்​டில் குடும்​பத்​தினருடன் தூங்​கிக் கொண்​டிருந்​தார். அதிகாலை 2 மணி​யள​வில் பாண்​டீஸ்​வரி அங்கு வந்து வீட்டை வெளிப்​புற​மாக பூட்டி ஜன்​னல் வழி​யாக​வும், வீட்​டின் மீதும் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​தார்.

இதில் கண்​ணன், அவரது தந்தை வேலு (60), தாய் பேச்சியம்​மாள் (55), சகோ​தரி மகள் சுகந்தி (35), சங்​கீதா (17), வினித் (10), சங்கீத் (12) ஆகியோர் தீயில் கருகி உயி​ரிழந்​தனர். பின்​னர் பாண்​டீஸ்​வரி காவல் நிலை​யத்​தில் சரண் அடைந்​தார்.

இந்​தச் சம்​பவம் அப்​போது தமிழகத்​தில் பெரும் அதிர்வலையை ஏற்​படுத்​தி​யது மேலும், இந்​தக் கொலை தொடர்​பாக பாண்டீஸ்​வரி, அவரது தாயார்‘ முரு​கேஸ்​வரி, சகோ​தரர் ராஜ​பாண்டி ஆகியோரை சேடபட்டி போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்கை மதுரை 6-வது கூடு​தல் மாவட்ட நீதி​மன்ற நீதிபதி உதய​வேல​வன் விசா​ரித்​தார்.

போலீஸ் தரப்​பில் அரசு வழக்​கறிஞர் செந்​தில்​ராஜ் ஆஜராகி வாதிடும்போது குற்றம் செய்ததற்கான முகாந்திரங்களை விளக்கியதுடன், சாட்சி மற்றும் மரணம் விளைவித்தற்கான கருவிகளையும் காட்சிப்படுத்தி வாதிட்டார். இதையடுத்து விசா​ரணை முடிந்த நிலை​யில் மூவரும் குற்​றம் இழைத்​தது நிரூபிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, அவர்​களுக்கு தலா 8 ஆயுள் தண்​டனை மற்​றும்​ தலா ரூ.45 ஆயிரம்​ அப​ராதம்​ விதித்​து நேற்​று தீர்​ப்​பளித்​​தார்​. பின்னர் அவர்கள் மூவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

<div class="paragraphs"><p>பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி</p></div>
அனைத்து அமைச்சர்களும் ‘வாங்க’ தொடங்கி விட்டனர்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in