வேட்பாளர் வரலாறு: எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, கருப்பணன் பின்புலம் என்ன?

பழனிசாமி, தங்கமணி, கருப்பணன்

பழனிசாமி, தங்கமணி, கருப்பணன்

Updated on
2 min read

சேலம்/நாமக்கல்: சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஈரோடு மாவட்டம் பவானியில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களைப் பற்றிய விவரம் வருமாறு:

எடப்பாடி தொகுதி:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி (72) எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமிக்கு, ராதா என்ற மனைவி, மிதுன்குமார் என்ற மகன் உள்ளனர்.

அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் 1989-ல் (சேவல் சின்னம்), 1991, 2011,2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றியும், 1996, 2006 ஆகிய தேர்தல்களில் தோல்வியும் அடைந்தார்.

இதேபோல, திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 1989-ல் வெற்றியும், 1999, 2004-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியும் அடைந்தார். எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் தற்போது 8-வது முறையாக போட்டியிடுகிறார்.

கட்சி பொறுப்புகள்

அதிமுகவில் 1972-ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ள பழனிசாமி, மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், அமைப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகள் வகித்து, 2023-ம் ஆண்டு முதல் அதிமுக பொதுச்செயலாளராக உள்ளார்.

அரசு பதவி

2011-ல் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016-ல் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த பழனிசாமி, 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தார். 2021 தேர்தலுக்குப் பின்னர் தமிழக எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

குமாரபாளையம் தொகுதி:

முன்னாள் அமைச்சர் தங்கமணி (65), குமாரபாளையம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் வசிக்கும் தங்கமணிக்கு, சாந்தி என்ற மனைவி, தரணிதரன் என்ற மகன், லதா என்ற மகள் உள்ளனர்.

திருச்செங்கோடு தொகுதியில் 2006, குமாரபாளையம் தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். அதிமுகவில், 1983-ம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ள தங்கமணி, ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், கட்சி அமைப்புத் தேர்தல் பொறுப்பாளர், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் என பதவிகளை வகித்தார்.

தமிழக அமைச்சரவையில் 2011-ல் வருவாய்த் துறை, 2013-ல் தொழில்துறை, 2015-ல் தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை, 2016-ல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவிகளை வகித்தார்.

பவானி தொகுதி:

முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் (69), பவானி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த கே.சி.கருப்பணனுக்கு தேவி என்ற மனைவி, யுவராஜ் என்ற மகனும் உள்ளனர்.

இவர், பவானி தொகுதியில் 2001-ல் வெற்றி, 2006-ல் தோல்வி, 2016, 2021-ல் வெற்றி பெற்றார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள கே.சி.கருப்பணன், 2016-2021-ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

<div class="paragraphs"><p>பழனிசாமி,&nbsp;தங்கமணி,&nbsp;கருப்பணன்</p></div>
திரிணமூல் vs பாஜக: மேற்கு வங்க தேர்தல் களம் 2026 எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in