4 ஆண்டுகளாகப் பதப்படுத்தப்பட்ட 80 வயது முதியவரின் உடல்: இறந்தவரை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பத்தின் வருகைக்காக காத்திருந்த குடும்பத்தினர்

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on: 
1 min read

புதுடெல்லி: ​மும்​பை​யில், 4 ஆண்​டு​களுக்கு முன் இறந்த 80 வயது முதி​ய​வரின் உடல் ஃப்​ரீசரில் பதப்​படுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது.

இறந்​தவரை உயிர்ப்​பிக்​கும் தொழில்​நுட்​பம் வரும் என நம்​பி, அவரது குடும்​பத்​தினர் காத்​திருந்​தனர். தகவல் கிடைத்​ததும் குரார் காவல் துறை​யினர் சம்பவ இடத்​துக்​குச் சென்று உடலைக் கைப்​பற்​றினர்.

அப்​போது உடலை அமெரிக்​கா​வில் உள்ள ‘கிரையோனிக்​ஸ்’ மையத்​துக்கு அனுப்​பும் ஏற்​பாடு​கள் நடந்​து ​கொண்​டிருந்​தன.

அங்கு இறந்​தவர்​களை உயிர்ப்​பிக்​கும் ஆய்வு நடை​பெறு​வ​தாகக் கூறப்​படு​கிறது. விசா​ரணை​யில், முதி​ய​வர் 2022-ல் புற்​று​நோய், சிறுநீரகச் செயலிழப்பு உள்​ளிட்ட நோய்​களால் இயற்​கை​யாக உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது. அவரது மரணத்தை ஏற்க முடி​யாத குடும்​பத்​தினர், இறு​திச் சடங்​கு​களைச் செய்​ய​வில்​லை.

வீட்​டில் ஒரு ஃப்​ரீசரில் உடலை வைத்​திருந்த அவர்​கள், பின்​னர் மலாட்​டில் உள்ள பகல்​நேரப் பராமரிப்பு மையத்​தின் ஃப்​ரீசருக்கு மாற்​றி, மாத வாடகை​யும் செலுத்தி வந்​தனர். இதற்​காக லட்​சக்​கணக்​கான ரூபாய் செல​விட்​டுள்​ளனர்.

புதுப்​பிப்​புப் பணி​களுக்​காக அந்த மையம் ஒரு மாதம் மூடப்​பட்​ட​போது, உடல் இருப்​பது வெளியே தெரிந்து போலீஸா​ருக்​குத் தகவல் அளிக்​கப்​பட்​டது. காவல் துறை​யினர் குடும்​பத்​தினருக்கு ஆலோ​சனை வழங்​கிய பின், நேற்று முன்​தினம் உடல் தகனம் செய்​யப்​பட்​டது.

ஒரு​வர் இறந்​த​தாக அறிவிக்​கப்​பட்ட பின், அவரது உடலிலிருந்து ரத்​தம் அகற்​றப்​பட்​டு, சிறப்பு வேதிப்​பொருட்​கள் செலுத்​தப்​படு​கின்​றன. பின்​னர் உடல் அல்​லது தலை -196 டிகிரி செல்​சி​யஸில் திரவ நைட்​ரஜனில் சேமிக்​கப்​படு​கிறது.

எதிர்​காலத்​தில் இவர்​களை உயிர்ப்​பிக்க முடி​யும் என இம்​மை​யங்​கள் நம்​பு​கின்​றன. அமெரிக்​கா​வின் அல்​கோர் லைஃப் எக்​ஸ்​டென்​ஷன் ஃபவுண்​டேஷன், கிரையோனிக்ஸ் இன்​ஸ்​டிடியூட் ஆகியவை இத்​துறை​யின் முக்​கிய அமைப்​பு​கள்.

ஆனால், முக்​கிய அறி​வியல் சமூகம் இதைப் பரிசோதனை முயற்​சி, போலி அறி​வியல் என்று கருதுகிறது. தற்​போதைய தொழில்​நுட்​பத்​தால் உறைந்த திசுக்​களை மீண்​டும் உயிர்ப்​பிப்​பது சாத்​தி​யமில்​லை என்​ப​தே அவர்​களின்​ கருத்​து.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் ஆளில்லா தானியங்கி கட்டண வசூல் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in