சென்னை மீனவர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு: குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் அரசு நிதி

ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9  மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated on: 
2 min read

சென்னை: ’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில்,ஆந்தி ராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கடந்த அக்.29-ம் தேதி, காசிமேட்டைச் சேர்ந்த செல்வழகன் என்பவருக்கு சொந்த மான விசைப்படகில் சூர்யா(49), தண்டையார் பேட்டையைச் சேர்ந்த குப்பன் (48), முருகன் (48), காசிமேட்டைச் சேர்ந்த மோகன் (47), அரவிந்தன் (40), திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ் (52), விஜயகாந்த் (44), காசிபுரம் பி பிளாக்கைச் சேர்ந்த குப்புசாமி (58), கடலூரைச் சேர்ந்த நாராயணன் (57) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

ஆந்திர மாநில கடல் பகுதி யில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, முரசு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் தங்களது விசைப் படகைப் பாதுகாப்பாக ராமயபட்டினம் கடற்கரையில் நிறுத்தினர். பின்னர் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றபோது, படகின் இன்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த 3-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் அருகில் இருந்த மற்றொரு விசைப்படகுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள் ளனர். அதன்பிறகு 9 மீனவர்களை யும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, கடலோரக் காவல் படையினர் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, பிரகாசம் மாவட்டம் கொத்தபட்டினம் அருகே கடற்கரையில் 5 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகக் கூறப்பட்டது. மேலும், கடற்கரையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மாயமான மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து கிடப்பதை கடலோரக் காவல் படையினர் கண்டறிந்துள்ளனர்.

கரை ஒதுங்கிய உடல்களில் விஜயகாந்த், மோகன், முருகன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்துள்ளனர். எஞ்சிய 4 மீனவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.

குடும்பத்தினர் சாலைமறியல்: இதற்கிடையே, மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் காசிமேடு பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அமைச்சர் மரிய வில்சன் காசிமேடு பகுதிக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘ஆந்திரா புயலில் சிக்கி மாயமான 9 மீனவர்களும். புயல் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

<div class="paragraphs"><p>முரசு புயலில் சிக்கி ஆந்திர கடல் பகுதியில் மூழ்கிய படகு.</p></div>

முரசு புயலில் சிக்கி ஆந்திர கடல் பகுதியில் மூழ்கிய படகு.

பாதுகாப்பு விதிமுறைகளை படகு உரிமையாளர் பின்பற்றாமல் இருந்துள்ளதால் அதற்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். நெல்லூரில் 5 பேரின் உடல் கிடைத்ததாக தகவல் வந்துள்ளது. எஞ்சிய 4 பேரை தேடும் பணி நடை பெற்று வருகிறது. இந்த இழப்பை யாராலும், ஈடு செய்ய முடியாது’’ என்றார். மாயமான மீனவர்கள் குடும்பத்தினருடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆந்திரா விரைந்துள்ளனர்.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘சென்னை மீனவர்கள் 9 பேர் புயலில் மாயமான நிலையில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டு அதில் 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மீனவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், அதில் ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கவும் உத்தரவிடுகிறேன். மேலும் உடல்களை அரசு செலவில் தமிழகம் கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்’’ என்று கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9  மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p></div>
தூய்மை இந்தியா ஊரகத் திட்டம் 2028 வரை நீட்டிப்பு: பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு

X