ஜெயங்கொண்டம் அருகே அரசுப் பள்ளியில் ஆய்வக அறை மேசையில் மனிதக்கழிவு வீசியவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200 பேர் கைது
அரசு பள்ளியில் சாதி ரீதியான கருத்து வேறுபாட்டுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட விசிகவினர்.

அரசு பள்ளியில் சாதி ரீதியான கருத்து வேறுபாட்டுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட விசிகவினர்.

Updated on: 
1 min read

அரியலூர்: ஜெயங்​கொண்​டத்தை அடுத்த தத்​தனூர் கீழவெளி அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் 260-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பயின்று வரு​கின்​றனர். இப்​பள்​ளி​யில் பணி​யாற்​றிய சில ஆசி​ரியர்​கள், ஊழியர்​களுக்கு இடையே சாதி ரீதி​யான கருத்து வேறு​பாடு இருந்​துள்​ளது. இதை மாணவர்​களிடமும் ஆசி​ரியர்​கள் வெளிப்​படுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

மேலும், தீபாவளி விடு​முறை முடிந்து கடந்த 10-ம் தேதி பள்ளி திறக்​கப்​பட்​டபோது, ஆய்​வக அறை​யில் உள்ள மேசையில் மனிதக்​கழிவு வீசப்​பட்​டிருந்ததைக் கண்டு ஆய்​வக உதவியாளர் கண்​ணதாசன் அதிர்ச்​சி​யடைந்​தார்.

இது​குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் ரேணுகோபால் பள்​ளிக்​குச் சென்று விசா​ரணை நடத்​தி​யதுடன், காவல்​துறை​யிலும் புகார் அளித்​துள்​ளார். அதன்​பின், பள்​ளித் தலை​மையாசி​ரியர் முருகன், ஆய்​வக உதவியாளர் கண்​ணதாசன், சமூக அறி​வியல் ஆசி​ரியர் ரவிச்​சந்​திரன் ஆகியோர் வேறு பள்​ளி​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், பள்​ளி​யில் சாதி ரீதி​யான கருத்து வேறு​பாட்​டுக்கு காரண​மானவர்​களை​யும், பள்ளி ஆய்​வக அறை​யில் மேசையில் மனிதக்​கழிவு வீசி​ய​வர்​களை​யும் கைது செய்​யக் கோரி அரியலூர் மாவட்ட ஆட்சி​யர் அலு​வல​கம் முன்பு விடுதலை சிறுத்​தைகள் கட்​சி​யின் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் சிவா தலை​மையில் அக்​கட்​சி​யினர் நேற்று மறியலில் ஈடு​பட்​டனர். இதையடுத்து போராட்​டத்​தில் ஈடு​பட்ட 75 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதைத் தொடர்ந்து, கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் கதிர்​வளவன் தலை​மையில் விசிக​வினர் ஆட்சி​யர் அலு​வலக வளாகத்​துக்​குள் நுழைந்து முற்​றுகை​யிட்​டனர். அப்​போது, சிலர் கைகளால் தாக்​கியதில் ஆட்சி​யர் அலு​வலக கட்​டிடத்​தின் முகப்​பில் உள்ள கண்​ணாடி உடைந்​தது. இதையடுத்து, போராட்​டத்​தில் ஈடு​பட்ட 125 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

மாணவர்​கள் புறக்​கணிப்பு: இதனிடையே, பள்​ளி​யில் சாதி ரீதி​யான கருத்து வேறு​பாட்​டுக்கு காரண​மான அனைவரை​யும் பணி​யிட​மாற்​றம் செய்ய வேண்​டும். ஆய்​வக அறை​யில் மனிதக்​கழிவு வீசிய நபர்​களை கைதுசெய்ய வேண்​டும். பள்​ளிக்கு இரவு நேர காவலர் நியமிக்க வேண்​டும். பள்​ளி​யில் சிசி​டிவி கேமரா பொருத்த வேண்​டும் என வலியுறுத்தி பெற்​றோர் ஆசி​ரியர் கழகத்​தினர், பெற்​றோர், மாணவர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மேலும், 200 மாணவர்​கள் நேற்று பள்​ளிக்கு செல்​ல​வில்லை. அரசு பள்ளியில் சாதி ரீதியான கருத்து வேறுபாட்டுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட விசிகவினர்.

<div class="paragraphs"><p>அரசு பள்ளியில் சாதி ரீதியான கருத்து வேறுபாட்டுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட விசிகவினர்.</p></div>
தமிழகம் முழுவதும் பொது கலந்தாய்வு மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாறுதலுக்கு பணிமூப்பு பட்டியல்

X