தமிழகம் முழுவதும் பொது கலந்தாய்வு மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாறுதலுக்கு பணிமூப்பு பட்டியல்

தமிழகம் முழுவதும் பொது கலந்தாய்வு மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாறுதலுக்கு பணிமூப்பு பட்டியல்
Updated on: 
1 min read

தஞ்சாவூா்: தமிழகம் முழு​வதும் டாஸ்​மாக் ஊழியர்​களை பணி​யிட மாறுதல் செய்​யும் வகை​யில், பணிமூப்பு பட்​டியல் தயாரித்து வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

பொது கலந்​தாய்வு மூலம் இந்த பணி​யிட மாறுதல் மேற்​கொள்​ளப்​பட உள்​ள​தால் பணி​யாளர்​கள் வரவேற்று உள்​ளனர்.

தமிழ்​நாட்​டில் டாஸ்​மாக் நிறு​வனம் 38 மாவட்​டங்​களில் 4,408 கடைகள், 23 ஆயிரம் பணி​யாளர்​களு​டன் 2003-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வரு​கிறது.

டாஸ்​மாக் கடைகளில் பணி​யாற்​றும் பணி​யாளர்​கள் பலரும், சொந்த வட்​டத்தை விட்டு பிற வட்​டங்​களில் பல்​வேறு இடங்​களில் பணி​யாற்​று​வ​தால், அவர்​கள் பணி​யிட மாறுதல் கோரி வந்​தனர்.

மேலும், பணி​யிட மாறுதல் பொது கலந்​தாய்வு மூலம் வெளிப்​படை​யாக இருக்க வேண்​டும் எனவும் வலியுறுத்தி வந்​தனர்.

இதையடுத்து, பணி​யிட மாறுதல், நியமனம், சுழற்​சிமுறை, கலந்​தாய்வு ஆகியவை மேற்​கொள்ள ஏது​வாக, பணி​யாளர்​களின் பணிமூப்பு பட்​டியல் டாஸ்​மாக் நிர்​வாகத்​தால் தயாரிக்​கப்​பட்டு, வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, பணி​யில் சேர்ந்த நாள், கல்​வித் தகுதி, பிறந்த நாள், பணி​யின் தன்மை, உடற்​தகுதி, பணி​யாற்​றும் இடம், கடைகளின் தன்மை, எத்​தனை நாள் பணி​யாற்​றியுள்​ளார் என்​பது போன்ற விவரங்​களு​டன் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த பட்​டியல் அந்​தந்த மாவட்ட மேலா​ளர் மூலம், அறி​விப்பு பல​கை​யில் ஒட்​டப்​பட்​டுள்​ளது.

இதில், தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் 173 பேரின் பணிமூப்பு பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இது​குறித்து டாஸ்​மாக் பணி​யாளர்​கள் கூறியது: டாஸ்​மாக் கடைகள் தொடங்​கிய 2003 -ம் ஆண்டு முதல் நாங்​கள் பணி​யாற்றி வரு​கிறோம். தொடக்​ககாலத்​தில் கிடைக்​கும் இடத்​தில் பல்​வேறு சிரமங்​களுக்கு இடையே பணியை தொடங்​கினோம்.

இத​னால், பல கிலோ மீட்​டர் தொலைவு நாள்​தோறும் பயணித்து பணி​யாற்றி வந்​தோம். இத​னால், பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வந்​ததால், நாங்​கள் இட​மாறுதல் கேட்டு தொடர்ந்து டாஸ்​மாக் நிர்​வாகத்​துக்கு கோரிக்கை விடுத்​தோம். எங்​களது கோரிக்கை தற்​போது ஏற்​கப்​பட்​டுள்​ளது.

பணி​யிட மாறுதல் செய்ய வேண்​டு​மானால், பொது கலந்​தாய்வு மூலம் வெளிப்​படை​யாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக, பணி​யாளர்​களின் பணிமூப்பு பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் ஏதும் ஆட்​சேபனை இருந்​தால், உடன் தெரி​விக்​கவும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இதில் ஏ, பி, சி என 3 வகை​யாக பணி​யிட சுழற்​சிமுறை மாறுதல் விரைவில் நடை​பெற உள்​ளது. அப்​போது, பணி​யாளர்​கள் வசிக்​கும் இடங்​களுக்கு அரு​கில் உள்ள டாஸ்​மாக் கடைகளுக்கு பணி​யிட​மாறுதல் வழங்க நிர்​வாகம் உரிய நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்​றனர்.

தமிழகம் முழுவதும் பொது கலந்தாய்வு மூலம் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாறுதலுக்கு பணிமூப்பு பட்டியல்
‘உள்ளாட்சித் தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்’ - அண்ணாமலை கருத்து

X