“தென்னிந்தியாவில் பாஜக வளர்ந்து வருகிறது” - தேசிய செயல் தலைவர் நிதின் நிபின்

புதுச்சேரியில் உற்சாக வரவேற்பு
“தென்னிந்தியாவில் பாஜக வளர்ந்து வருகிறது” - தேசிய செயல் தலைவர் நிதின் நிபின்
Updated on
1 min read

புதுச்சேரி: “தென்னிந்தியாவில் பாஜக வலிமையாக வளர்ந்து வருகிறது” என்று அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நிதின் நிபின் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு முதல் முறையாகவும், கட்சியின் முதல் நிகழ்வாகவும் புதுச்சேரி பயணத்தை அவர் வகுத்திருந்தார். இதையொட்டி அவர் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு இன்று பிற்பகல் வருகை தந்தார். அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உடனிருந்தார்.

புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதியில் அவருக்குக் கட்சியினர் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், பாஜக புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் சால்வை அனைத்தும் பூங்கொத்து கொடுத்தோம் வரவேற்றனர்.

பின்னர் புதுச்சேரி நகரப் பகுதிக்கு மோட்டார் சைக்கிள், காரில் தொண்டர்கள் சூழ செயல் தலைவர் நிதின் நிபின் அழைத்து வரப்பட்டார். பாரதி பூங்கா அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார்.

அங்கு பாரதியார் வேடம் அணிந்திருந்த சிறுவர்கள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்து சட்டப்பேரவைக்கு எதிரேயுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செயல் தலைவர் நிதின் நிபின், “தென் மாநிலங்களில் பாஜக வலிமையாக வளர்ந்து வருகிறது” என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

மத்திய அமைச்சரை விட்டுச் சென்ற கார்: புதுச்சேரி எல்லைப் பகுதியில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நிபின் வருகை தந்தார். அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வந்த காரும் இதில் சிக்கியது. கார் எங்கு சென்றது என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் அதைப் பொருள்படுத்தாமல் நடக்கத் தொடங்கினார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் அவர் நடந்து வந்தார். பாதுகாப்பு அதிகாரிகளும் அவருடன் வந்தனர். இதையடுத்து மத்திய அமைச்சருடன் பாதுகாப்புக்கு வந்த கார் நிறுத்தப்பட்டு அந்த காரில் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதில் அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.

“தென்னிந்தியாவில் பாஜக வளர்ந்து வருகிறது” - தேசிய செயல் தலைவர் நிதின் நிபின்
ஶ்ரீவில்லி. ஆண்டாள் கோயில் மார்கழி நீராட்டு விழாவில் பகல் பத்து உற்சவம் | டிச.30-ல் பரமபத வாசல் திறப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in