மருமகனை எம்.பி.யாக்க முயற்சி; குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் திமுக - பாஜக விமர்சனம்

மருமகனை எம்.பி.யாக்க முயற்சி; குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் திமுக - பாஜக விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: அப்​பா, தங்​கை, மகன் வரிசை​யில் மரு​மகனை எம்​.பி.​யாக்கி குடும்ப ஆதிக்​கத்தை நிலைநிறுத்த திமுக முயற்​சிப்​ப​தாக தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக ஆட்​சி​யில் ஊழல் மலிந்​து​விட்​டது. சாதாரண மக்​கள் வீடு கட்​டி​னால்​கூட கவுன்​சிலர்​களுக்கு லஞ்​சம் கொடுக்க வேண்​டிய அவல நிலை உள்​ளது. சாதிச் சான்​றிதழ் பெறக்​கூட லஞ்​சம் கேட்​கப்​படு​கிறது.

திமுக தலை​வரின் மரு​மகன் சபரீசன் தற்​போது வெளிப்​படை​யாகவே அரசி​யல் களத்​துக்கு வந்​துள்​ளார். அப்பா முதல்​வர், தங்கை எம்​.பி., மகன் துணை முதல்​வர் என்ற வரிசை​யில் இப்​போது மரு​மக​னை​யும் எம்​.பி.​யாக்​கி, ஒரு குடும்​பத்​தின் ஆதிக்​கத்தை நிலைநிறுத்​தவே திமுக முயற்​சிக்​கிறது.

குடும்ப அரசி​யல், ஊழல், சர்​வா​தி​கார ஆட்​சி​யில் இருந்து தமிழகத்தை அனை​வரும் மீட்​டெடுக்க வேண்​டும். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நான்​கு​முனைப் போட்டி நில​வி​னாலும், களத்​தில் உண்​மை​யான போட்டி அதி​முக - பாஜக கூட்​ட​ணிக்​கும், திமுக - காங்​கிரஸ் கூட்​ட​ணிக்​கும் இடையே​தான் என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது.

தவெக அல்​லது நாதக​வுக்கு அளிக்​கப்​படும் வாக்​கு​கள், திமுகவை வீழ்த்​து​வதற்கு உதவாது. மாறாக, அவை செல்​லாத ஓட்​டு​களாகவே அமைந்​து, மறை​முக​மாக திமுக​வின் வெற்​றிக்கு வழி​வகுக்​கும்.

எனவே, திமுகவை வீழ்த்த வேண்​டும் என்று நினைக்​கும் வாக்​காளர்​கள் அனை​வரும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கே வாக்​களிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

மருமகனை எம்.பி.யாக்க முயற்சி; குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் திமுக - பாஜக விமர்சனம்
மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஊழல் குற்றச்சாட்டால் ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்டவர்: உதயநிதி பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in