புதுச்சேரி தேர்தல் | காரைக்கால் தெற்கு பாஜக வேட்பாளராக அருள்முருகன் அறிவிப்பு!

புதுச்சேரி தேர்தல் | காரைக்கால் தெற்கு பாஜக வேட்பாளராக அருள்முருகன் அறிவிப்பு!
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 10-வது தொகுதியான காரைக்கால் தெற்கு வேட்பாளராக அருள்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியில் என்ஆர்காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 14 தொகுதிகளில் 10 தொகுதிகள் பாஜகவுக்கும், அதிமுக, லஜகவுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அதையடுத்து பாஜக 9 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது. பத்தாவது தொகுதியான காரைக்கால் தெற்கு வேட்பாளராக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் அருள்முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொதுச்செயலர் அருண்சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து அருள்முருகனுக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் படிவங்களை இன்று அளித்தனர்.

என்டிஏ கூட்டணியில் அறிவித்து பத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக பாஜக மட்டுமே அறிவித்துள்ளது. இதில் அறிவிப்புக்கு முன்பாகவே அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்து விட்டனர். மீதமுள்ளோர் நாளை மனுதாக்கல் செய்கின்றனர்.

புதுச்சேரி தேர்தல் | காரைக்கால் தெற்கு பாஜக வேட்பாளராக அருள்முருகன் அறிவிப்பு!
திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் - வேல்முருகன் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in