

சென்னை: சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்ல எம்.எல்.எஃப்.எஃப் என்ற நவீன சுங்கக் கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றி நிற்காமல் செல்ல முடியும். சாலையின் மேலே பொருத்தப்பட்டுள்ள நவீன தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரக் கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் கருவிகள் மூலம் வாகனங்கள் தானாகவே அடையாளம் காணப்பட்டு, அவற்றின் வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக்கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன்முதலாக கடந்த அக்டோபரில் பரனூர் சுங்கச்சாவடியிலும், அதைத்தொடர்ந்து நெமிலி சுங்கச்சாவடியிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 3-வதாக ராணிப்பேட்டை மாவட்டம் காரைப்பேட்டை – வாலாஜாபேட்டை இடையேயான சென்ன சமுத்திரத்திலும் அமல்படுத்தப் பட்டுள்ளது.