இளம்பெண் அளித்த புகாரில் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு

இளம்பெண் அளித்த புகாரில் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு
Updated on: 
1 min read

சென்னை: ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்றும் மேடைப் பேச்சுகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் முத்துக்குமரன். இவர் தன்னுடன் நெருக்கமாகப் பழகி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் ஒருவர் அண்மையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையே, தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பி, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி முத்துக்குமரன், அந்தப் பெண் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்தப் புகாரில் குற்றவியல் வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி, அப்பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துக்குமரன் மீது புகார் அளித்தார்.

இந்நிலையில், இந்தப் புகார் மனு, மேல் விசாரணைக்காக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 69-ன் கீழ் முத்துக்குமரன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக முத்துக்குமரனுக்கு சம்மன் அனுப்பி, நேரில் ஆஜராகச் செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இளம்பெண் அளித்த புகாரில் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு
கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? - அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை

X