சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு விசாரணைக்கு நிதியமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

10-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அமைச்​சர் மரிய​வில்​சன்

அமைச்​சர் மரிய​வில்​சன்

Updated on
1 min read

புதுச்சேரி: சொத்து பிரச்​சினை​யில் சகோ​தரை வீடு புகுந்து தாக்​கிய வழக்​கில், தமிழக நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் புதுச்​சேரி நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜராக​வில்​லை. இதையடுத்து வரும் 10-ம் தேதி கட்​டா​யம் ஆஜராக வேண்​டும் என நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில், ஆர்​.கே.நகர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற மரிய​வில்​சன் நிதி​யமைச்​ச​ராக பதவி வகித்து வரு​கிறார். இவரும், இவரது தந்தை நெஸ்​டோர் ஆகிய இரு​வரும் சொத்து பிரச்​சினை காரண​மாக கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு புதுச்​சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோ​தரர் வீட்டை உடைத்து உள்ளே சென்று அவரை​யும், அவரது மனை​வியை​யும் தாக்​கிய​தாக புகார் எழுந்​தது.

இதுபற்றி பாதிக்​கப்​பட்​டோர் லாஸ்​பேட்டை காவல்​நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இச்​சம்​பவம் தொடர்​பாக ஆறு பிரிவு​களில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். இந்த வழக்கு விசா​ரணை புதுச்​சேரி முதலா​வது குற்​ற​வியல் நடு​வர் மன்​றத்​தில் நடந்து வரு​கிறது. விசா​ரணைக்​காக பலமுறை வாய்தா வழங்​கப்​பட்ட போதி​லும், மரிய​வில்​சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

கடந்த மாத வாய்​தா​வின் போதும் மரிய வில்​சன் ஆஜராக​வில்​லை. இந்த நிலை​யில் குற்​றப்​பத்​திரி​கை​யை​யும் குற்​றம்​சாட்​டப்​பட்​டோர் மீதான குற்​றச்​சாட்​டு​களுக்கு ஆதா​ர​மாக புகார்​தா​ர​ரால் சமர்ப்​பிக்​கப்​பட்ட பென் டிரைவ்-வைப் பெற நீதி​மன்​றத்​தில் கட்​டா​யம் நேற்று (சனிக்​கிழமை) ஆஜராக வேண்​டும் என நீதித்​துறை நடு​வர் சேரலாதன் ஏற்கெனவே உத்​தர​விட்​டார்.

ஆனால் மரிய​வில்​சன் நேற்று ஆஜராக​வில்​லை. அவரின் வழக்​கறிஞர், தமிழகத்​தில் பட்​ஜெட் பணி​கள் நடந்து வரு​வ​தால், மரிய​வில்​ச​னால் ஆஜராக முடிய​வில்லை என விளக்​கம் அளித்​தார். அதற்கு நீதிபதி, “சனிக்​கிழமை, விடு​முறை நாள் என்​ப​தால்​தான் ஆஜராகும்​படி கூறினேன். இப்​போதும் ஆஜராக​விட்​டால் என்ன செய்​வது” என கேள்வி எழுப்​பி​னார்.

அதைத்​தொடர்ந்து வரும் 6-ம் தேதி கண்​டிப்​பாக ஆஜராக வேண்​டும் என கூறி​னார். அதற்கு காலநீட்​டிப்பு கோரப்​பட்​டதையடுத்து வரும் 10-ம் தேதி கட்​டாய​மாக நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிக்​கையை பெற மரிய​வில்​சன் ஆஜராக வேண்​டும் என நீதிபதி உத்​தரவு பிறப்​பித்​தார்.

<div class="paragraphs"><p>அமைச்​சர் மரிய​வில்​சன்</p></div>
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்: சினிமா, ஓடிடி பைரசிக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in