தமிழக உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்

அஸ்ரா கார்க்
அஸ்ரா கார்க்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐ.ஜியாக உள்ள அஸ்ரா கார்க், தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது உளவுத் துறை ஐ.ஜி.யாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு, அவினாஷ் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்தச் சூழலில், தற்போது அஸ்ரா கார்க் உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், அந்த வழக்கை விசாரிக்க அப்போதைய திமுக அரசு அஸ்ரா கார்க்கை நியமித்தது நினைவுகூரத்தக்கது.

அஸ்ரா கார்க்
“தூய சக்தியா... அடுத்த கட்சி எம்எல்ஏக்களை ‘தூக்கும்’ சக்தியா?” - தவெக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in