சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் நியமனம்

சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் நியமனம்
Updated on: 
1 min read

சென்னை: சென்​னை, பெரம்​பலூர், ராம​நாத​புரம் மாவட்​ட முதன்மை அமர்வு நீதிப​தி​களை நியமித்து உயர் நீதி​மன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறி​வுநிதி உத்​தர​விட்​டார்.

சென்​னைப் பெருநகர முதன்மை அமர்வு நீதிப​தி​யாக பணியாற்றிய பி.கார்த்​தி​கேயன், சமீபத்​தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிப​தி​யாக நியமிக்கப்​பட்​டார். இந்​நிலையில் கோவையில் நிதி நிறுவன மோசடி வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்ற நீதிபதி எம்​.என்​.செந்​தில்​கு​மார் சென்​னைப் பெருநகர முதன்மை அமர்வு நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதே​போல, காஞ்​சி மோட்​டார் வாகன விபத்து வழக்​குகளை விசாரிக்​கும் நீதிமன்ற மாவட்ட நீதிபதி வி.​பாண்​டிய​ராஜ், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிப​தி​யாக இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளார். பூந்​தமல்லி 3-வது கூடு​தல் மாவட்ட நீதிபதி சி.​விஜயகு​மார், ராம​நாத​புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

செங்​கல்​பட்டு போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, திரு​வாரூர் மாவட்ட அமர்வு நீதிப​தி​யாக மாறு​தல் செய்யப்பட்டுள்​ளார். திருவாரூரில் மாவட்ட நீதிப​தி​யாக பணியாற்​றிய பி.செல்​வமுத்​துக்​கு​மாரி, செங்​கல்​பட்டு மாவட்ட நிரந்தர லோக்​-அ​தாலத் நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் நியமனம்
தாம்பரத்தில் சுகாதாரக் கண்காட்சி தொடக்கம்: பார்வையாளர்களை கவர்ந்த 52.8 அடி உயர ‘ஹெல்த் கொலு’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in